Advertisment

லட்சக்கணக்கானோர் திரண்ட தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு - ஸ்பெஷல் புகைப்படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடமுழுக்கு சர்ச்சை: தஞ்சை கோயில் மூலமாக ஆரிய-திராவிட விவாதங்கள்?

Thanjavur big temple consecration Explained

1000 ஆண்டுகள் கடந்த, உலகப் பிரசித்திபெற்ற கோயிலான தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகள் கழித்து நடந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.

Advertisment

publive-image

லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வைக் காண வந்ததால், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

publive-image

8வது யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதன்பின் மகாபூர்ணஹதி பூஜை, ஹோமம் நடைபெற்றது.

publive-image

பல மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவை காண மக்கள் வருகை புரிந்தனர். காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடந்தது.

 

publive-image

காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடந்தது. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடந்தது.

publive-image

கோபுரத்தில் தமிழ் மந்திரம் ஒலிக்க ஓம் நமச்சிவாய நாமம் விண்ணை முட்டியது. அதேபோல் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, சம்ஸ்கிருத மந்திரங்களும் கூறப்பட்டது. இந்த தேவாரம், திருவாசகத்தை கேட்க நிறைய இடங்களில் சிறப்பு ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

publive-image

அதன்பின் சரியாக 9:21 மணிக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் குடமுழுக்கு நடக்கிறது. இதனால் இந்த விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

publive-image

காலை 10 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும்.

publive-image

இதை பல லட்சம் மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இந்த விழாவில் இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

 

publive-image

இந்த கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளது. இதில் ஒரு கோபுரம் ராஜ கோபுரம் ஆகும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும்.

publive-image

இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

publive-image

publive-image

பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள், மந்திரங்கள் ஓதப்பட்டது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment