டிடிவி தினகரன் மீதான வழக்கின் தடையை நீக்க வேண்டும் : அமலாக்கத்துறை மனு

டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலவாணி மோசடி வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டி.டி.வி. தினகரனுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில் உள்ளது. இங்கிலாந்தில் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டெபாசிட் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட வங்கியில், டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கிராப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங் கப்பட்டு, பணப் பரிவர்த்தனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில், டி.டி.வி. தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி, இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிரான இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 7ஆம் தேதி விசாரித்த நீதிபதி ரமேஷ், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற, வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் , டிடிவி தினகரன் மனுவிற்கு பதில் அளித்து அமலாக்க துறை உதவி இயக்குனர் சாதிக் முகமது நைனார் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் 21 ஆண்டுகளுக்கு பிறகு குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டார்களுக்கு பல முறை வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் விசாரணை நடைபெற உதவவில்லை. மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெடர்ந்த வழக்கு விசாரணையில் மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி தான் விசாரணை நடைபெற்று வருகின்றது. வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதன் மூலம் விசாரணை பதிக்கபடும். மேலும் மனுதரார்க்கு போதுமான அனைத்து வாய்ப்புகள் மற்றும் காலம் அளிக்கபட்டுள்ளாதல் இந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். தினகரனில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

×Close
×Close