அ.செ. மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

டிடிவி தினகரன் மீதான அன்னிய செலவாணி வழக்கில் குற்ற சாட்டைப் பதிவு செய்தார் நீதிபதி. சாட்சிகளை வரும் 22 ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ் மெண்ட் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட், டெண்டி இன்வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரியின் நிறுவனங்கள் பணபரிவர்த்தனை அனைத்தும் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் வைப்பு தொகையாக வைக்கப்பட்டது. 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டும் வங்கியில் இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது கடந்த 1996 ஆம் ஆண்டு அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த இரண்டு வழக்குகளும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றம் 2 இல் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தினகரன் நேரில் ஆஜரானார்.

குற்றச்சாட்டு பதிவை தொடங்கிய நீதிபதி அமலாக்க துறை தினகரன் மீது சுமத்திய குற்றங்களை வாசித்து இந்த குற்றங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தினகரன் அமலாக்க துறை தன் மீது சுமத்திய குற்றங்களை மறுக்கிறேன். தான் குற்றமற்றவன் என தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி,  இதன் பின் சாட்சிகளை அழைத்தார். ஆனால் சாட்சிகளான கிஸ்தூர் சந்த்,  ஜானகி ராமன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களை வரும் 22 ம் தேதி அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமலாக்க துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

×Close
×Close