Advertisment

பொதுமக்களிடம் வேலையை காட்டிய போலி பத்திரிகையாளர்கள்.. கலெக்டர் பகிரங்க எச்சரிக்கை

போலி பத்திரிகையாளர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், 9498042423 என்ற whatsapp எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
The district Collector warns fake journalists in Coimbatore

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்., சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் " பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும் அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வர பெற்றுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமல்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை பத்திரிகையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042423 என்ற whatsapp எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment