Advertisment

இனி அலைய வேண்டாம்.. புதிய ஆன்லைன் சேவைகளை தொடங்கும் சென்னை மாநகராட்சி!

பெருநகர சென்னை மாநகராட்சி, குடிமக்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான புதிய ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai news

பெருநகர சென்னை மாநகராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களைத் திருத்துதல், சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் மற்றும் RTI சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுதல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே உள்ள சேவைகளை வழங்குவது உட்பட புதிய ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisment

இந்த முயற்சிகள் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் குடிமக்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான மாநில அரசாங்கத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். மற்ற இடங்களில் உள்ள நல்ல நடைமுறைகளை சென்னையில் பின்பற்ற முயற்சி செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட தொடர் கூட்டங்களில், ஆன்லைனில் வழங்கக்கூடிய சுமார் 16 சேவைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஏஜிஎஸ் காலனி ஆர்டபிள்யூஏ வேளச்சேரி மேற்கு செயலாளர் கீதா கணேஷ் கூறுகையில், கிரேட்டர் சென்னை கார்பிரேஷன் (GCC) இணையதளத்தில் கிடைக்கும் ஆன்லைன் சேவைகளின் பட்டியல், அனைத்து ஜி.சி.சி அலுவலகங்களின் முன் ஒரு பலகையில் காட்டப்பட வேண்டும் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். இதில், நிர்ணயிக்கப்பட்ட நேரம், தகுதிக்கான அளவுகோல், கட்டணத் தொகை, விண்ணப்பங்களின் நடைமுறை, விண்ணப்பத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மற்றும் எந்தவொரு சேவைக்கும் ஒப்புதல் பெற எதிர்பார்க்கப்படும் நேரம், மற்றும் அதிகாரிகளால் தாமதம் ஏற்பட்டால், தாமதத்திற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, 2020-2021 ஆம் ஆண்டில், சுமார் 38.35 லட்சம் குடியிருப்பாளர்கள் தற்போதுள்ள பிறப்புச் சான்றிதழ் சேவைகளைப் பயன்படுத்தி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைனில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சென்னையில் பிறந்து வெளிநாட்டில் பணிபுரிந்தவர்கள் இதுபோன்ற ஆன்லைன் சேவைகளை அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால் பிறப்புச் சான்றிதழில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான ஆன்லைன் சேவைகளை அவர்களால் பெற முடியவில்லை.

தற்போதுள்ள ஆன்லைன் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் சேவைகளை ஆதார் மற்றும் இ-சனத் போன்ற இணையதளங்களுடன் மாநகராட்சி ஒருங்கிணைத்துள்ளது.

மேலும் இது இந்தியாவில் உள்ள அதிகாரிகளிடமிருந்து ஆவணங்களைப் பெற்ற’ இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு காகிதமில்லா ஆவண சரிபார்ப்பு சேவைக்கான மையப்படுத்தப்பட்ட தளத்தை வழங்குகிறது.

வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பிற சரிபார்ப்பு ஏஜென்சிகள் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்ட உண்மையான ஆவணங்களைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், இ-சனத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சில சேவைகள் மாநகராட்சியால் இலவசமாக வழங்கப்படுகிறது.

2020-2021 ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவன வரி மதிப்பீட்டிற்கான 5,696 விண்ணப்பங்கள் குடிமை அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் பணியகத்தின் ஒற்றைச் சாளர போர்டல் மற்றும் தமிழ்நாடு மாநில ஒற்றைச் சாளர போர்டல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 2020-2021 ஆம் ஆண்டில் மொத்தம் 53,381 வர்த்தக உரிம சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. 2020-2021ல் கட்டிட ஒப்புதலுக்கான குறைந்தபட்சம் 12,803 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment