பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று (ஜனவரி 2) நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணியளவில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. விழாவை தி இந்து நாளிதழைச் சேர்ந்த சீனிவாசன் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த சீனிவாசன் (56)அவர்கள் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த சீனிவாசன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/