அண்ணா அறிவாலயம் எனப்படும் திமுகவின் தலைமைச் செயலகம்

இறுதியாக ஏப்ரல் மாதத்தில் அறிவாலயத்திற்கு சென்றார் கருணாநிதி

அண்ணா அறிவாலயம் உருவான வீதம் : கலைஞர் கருணாநிதி எப்போதும் ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருப்பவர்.

எப்படி சட்டமன்றம் போவதை வழக்கத்தில் வைத்திருந்தாரோ அப்படியே தான் அறிவாலயம் போவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தார் கலைஞர்.

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பு வரை தினமும் அறிவாலயம் செல்வதை வழக்கத்தில் கொண்டிருந்தார் கலைஞர்.

அண்ணா அறிவாலயம் எனும் திமுக தலைமைச் செயலகம்

1985ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் கட்டப்பட்டது தான் அண்ணா அறிவாலயம். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது திமுக உறுப்பினர்களை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து வெளியேறச் சொல்லி கட்டளையிட்டார்.

மாநில அரசு அலுவலகத்தில் ஒட்டியிருக்கும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் மற்றும் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுக்கச் சொல்லி அறிவித்திருந்தது.

அதற்காக 1985, மே 31 வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது என்று தன்னுடைய நெஞ்சுக்கு நீதி என்ற சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.

அங்கிருந்து வெளியேறிய பின்னர் அண்ணாசாலையில் அறிவாலயம் கட்டப்பட்டது. உடல் நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் ஓய்வு பெற்று வந்த கலைஞர் இறுதியாக ஏப்ரல் மாதம் 2018 இரவு எட்டு மணிக்கு பார்வையிட்டார்.

உடல்நிலைக் குறைவுக்குப் பின் மூன்று முறை மட்டுமே அறிவாலயம் சென்றிருக்கிறார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தொடர்பான அனைத்து தகவல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close