டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 34ஆக உயர்வு

எல்லா அமைச்சர்களும் விரைவில் துணை பொதுசெயலாளர் தினகரனை சந்திக்க வருவார்கள்.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிடிவி தினகரனை அவரது வீட்டிற்கு சென்று
அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி ஆகிய இருவரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது: எங்க துணைபொதுசெயலாளரை அனைவரும் வந்து பார்ப்பது அவர்களது கடமை, அனைவரும் வந்து பார்ப்பார்கள்.

ஒ.பி.எஸ். மகன் எங்கள் தரப்பிற்கு வாருங்கள் என எம்.எல்.ஏக்களிடம் பேசி உள்ளார்.

ஜெய்குமார் அன்று பேசியதோடு முடிந்து விட்டது. அவ்வளவு தான். இனி அவர் பேச மாட்டார். எல்லா அமைச்சர்களும் விரைவில் துணை பொதுசெயலாளர் தினகரனை சந்திக்க வருவார்கள்.

அதிமுக ஒரே அணியாக தான் உள்ளது. அந்த அணிக்கு பொது செயலாளர் சின்னம்மா சசிகலா, துணை பொது செயலாளர் தினகரன் தான்.

கட்சியை பலப்படுத்த, எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை, அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி விரைவில் நலத்திட்டங்களுடன் கொண்டாடப்படும்.

விரைவில் டி.டி.வி.தினகரன் கட்சி பணியை பலப்படுத்த அனைத்து நடவடிக்கையில் ஈடுபடுவார்.

இவ்வாறு தங்க தமிழ் செல்வன் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close