Advertisment

பொள்ளாச்சி பரம்பிகுளம் அணையின் ஷட்டர் கழன்று விழுந்தது.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

அணையில் இருந்து வெளியேறும் நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
The shutter of Pollachi Paramphikulam dam fell down

பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் ஒரு ஷட்டர் கழன்று விழந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுபணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கு. காமராஜ் கட்டிய அணைகளில் மிகவும் பிரபலமான அணை பரம்பிக்குளம் அணையாகும்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணை உபரிநீர் சேடல்டேம் வழியாக சென்று தூணகடவு வழியாக சென்று பரம்பிக்குளம் அணை வந்துசேருகிறது.

71கனஅடி கொண்ட பரம்பிக்குளம் அணை உபரிநீர் வெளியேற்றம் செய்யும்பொழுது கோரள சாலக்குடிநீர் சென்று கடலில் கலக்கிறது.

நேற்று இரவு10 மணி அளவில் அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பொதுபணி துறை ஊழியர்கள் உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின்பேரில் பாலக்காடு ஜில்லா மாவட்ட கலெக்டர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொது பணித்துறை அதிகாரிகள் தற்பொழுது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்ரை கட்டுபடுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அணையில் இருந்து வெளியேறும் நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment