Advertisment

அ.தி.மு.க பொதுக்குழு.. சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்.. எம்.ஜி.ஆர். வகுத்த விதி என்ன?

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜன.10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
The Supreme Court adjourned the AIADMK General Assembly case to January 10

இரட்டை தலைமை காலாவதியாகவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (ஜன.6) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

மேலும், “கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யபட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாகியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது" என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

தொடர்ந்து, “இரட்டை தலைமை காலாவதியாகவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 10 ஆ ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமல் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 23-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில். ஜூலை 11-ந் தேதி மற்றொரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சியில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Aiadmk Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment