சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் அதிகாரிக்கு சம்மன் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் நிராகரிக்கபட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20-ல் நேரில் ஆஜராகும்படி அத்தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு சம்மன் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

thirumavalavan election case, vck president thirumavalavan,vck,திருமாவளவன், விசிக, தேர்தல் வழக்கு, kattumannarkovil, சென்னை உயர் நீதிமன்றம், madras high court, high court order send summon to election officer, thirumavalavan

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 102 தபால் வாக்குகள் நிராகரிக்கபட்டுள்ளதாகவும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் மனுதரார் தோல்வியடைந்ததாக தெரிவிக்கபட்டது.

இந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசுவாமியை சாட்சியாக விசாரிக்கும் போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை சமர்பிக்கும் படி மனுதாரரோ, எதிர் மனுதாரரோ கோரவில்லை என குறிப்பிட்ட நீதிபதி இந்த வழக்கில் தீர்பளிக்கும் முன் நிராகரிக்கப்பட்ட 102 தாபல் வாக்குகளை ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அதனால், காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துகுமாரசுவாமி நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thirumavalavan election case madras high court order send summon to election officer

Next Story
ஒன்றிய கவுன்சிலில் 95 இடங்களில் வெற்றிபெற்ற அமமுக; 3-ம் இடத்தைப் பிடித்து அதிமுகவுக்கு அதிர்ச்சிelection results tamil nadu, tamilnadu election result, tn election results 2019, tamil nadu election results, AMMK get third place, AMMK, TTV Dinakaran, உள்ளாட்சி தேர்தல், அமமுக, டிடிவி தினகரன், அமமுக மூன்றாவது இடம், local body election result, tamil nadu local body election result, local body election, tn local body election result, tamil nadu election commission, tnsec, tamil nadu election result, tn election results 2020, ullatchi election result
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com