Advertisment

திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழா: கொரோனா சான்று கட்டாயமில்லை , உயர்நீதிமன்றம் உத்தரவு

Thirunallaru Sri Saneeswara Bagwan Temple sani peyarchi: சனிப்பெயர்ச்சி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

author-image
WebDesk
New Update
திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழா: கொரோனா சான்று கட்டாயமில்லை , உயர்நீதிமன்றம் உத்தரவு

நவகிரக யாத்திரை ஸ்தலங்களில் மிக முக்கிய ஒன்றாக திருநள்ளாறு கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, சனீஸ்வர பகவன் ஒவ்வொரு ராசியிலும்  2½ ஆண்டுகள் வசிக்கிறார். சனீஸ்வரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகக் கூடிய நிகழ்வை திருநள்ளாறு சனீஸ்வர பகவானின் புனித ஆலயத்தில் “சனிபெயர்ச்சி விழா” என்று கொண்டாடப்படுகிறது. நாளை, நடக்கும் சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்  பெயருகிறார்.

Advertisment

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் பங்கு கொள்ள, தமிழகம், புதுவை மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் திரளாக கலந்து கொள்வர்.

இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழா அன்று கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கு உட்பட்டு விழாவை நடத்துவது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை  ஆளுநர் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசித்து  நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இதனையடுத்து, 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா சான்றுடன் வருபவர்கள் மட்டுமே திருநள்ளாறு வர அனுமதி தரப்படும் என்றும், ஒரே நேரத்தில் 200 மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதுவை துணை நிலை அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயமாக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநள்ளாறு “சனிபெயர்ச்சி விழா" கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை " என்று தெரிவித்தது.

சனிப்பெயர்ச்சி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment