scorecardresearch

திருவள்ளூர் அருகே அம்மன் சிலைக்கு தீவைத்து எரிப்பு

அம்மன் சிலை எரிக்கப்பட்டது குறித்து கோயில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Thiruvallur
Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே கோயிலில் இருந்த அம்மன் சிலைக்கு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர்  மாவட்டம் ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூட்டப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து எரித்துள்ளனர். காலை கோயில் நிர்வாகி வந்த பார்த்தபோது, அம்மன் சிலை தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அம்மன் சிலை எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thiruvallur amman statue burned

Best of Express