Advertisment

கலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்?

Thiruvarur New Collector : திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தமிழக அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கலைஞர் மாவட்டத்திற்கு ஆக்டிவ் கலெக்டர்: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்?

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணனை அம்மாவட்ட மக்கள் வெகுவாக புகழ்ந்து வரும் நிலையில், அவர் யார், எங்ருந்து வந்தார் அவர் பின்னணி என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த மே 7-ந் தேதி புதிதாக ஆட்சியில் அமர்ந்த  திமுக தமிழகத்தில் உயர் அதிகாரிகள் பலரையும் இடமாற்றம் மற்றும் புதிய அதிகாரிக்கள் நியமிப்பது தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ச்சியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறையில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், இளம் அதிகாரிகள் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.



தமிழ்நாட்டில் நேற்று முதல் நாள் 54 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியார் வே.சாந்தா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதிதாக நியமிக்கப்பட்டதில் இருந்து இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  பலரும் இவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் பெரிய அளவில் பெற்றுள்ள இவர், இதற்கு முன்பு கோவையில் வணிகவரித்துறை (மாநில வரிகள்) மாவட்ட இணை ஆணையராகப் பதவி வகித்த வந்துள்ளார். தற்போது மாறுதலின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.  கேரளாவை சேர்ந்த இவர், பொள்ளாச்சியில் சார் ஆட்சியராக இருக்கும் போது அங்குமரங்களை வெட்டாமல் சாலை போடும் திட்டத்திற்காக, மரங்களை வேறு இடங்களுக்கு அப்படியே மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் மக்களிடம் நெருங்கி பழகி அவர்களின் நன்மதிப்பை பெற்ற அவர், மரங்களை வெட்டாமல் அப்படியே நகர்த்து இந்த மிக கடினமான இந்த திட்டத்தை மக்கள் உதவியோடு செய்து வந்தார்.

மேலும்   பல்வேறு இளைஞர்களின் துணையோடு மரங்களை வெட்டுவதை கட்டுக்குள் கொண்டு வந்த அவர், கோவையிலும் வணிகவரித்துறை இணை இயக்குனராக இருந்த போது கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் அண்டை மாநிலான கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், வேகமாக தமிழ் கற்றுகொண்டு மக்களிடையே நெருக்கமாக பழகி வருகிறார். முதுகலை மேலான்மை படித்துள்ள அவர், திருமணத்திற்கு பின் வெளிநாடு சென்றுவிட்ட அவர் குழந்தை பெற்ற பின்பு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மக்களிடம் இவரின் அனுகுமுறை மற்றும் இவரின் சமூக நோக்கம் ஆகியவற்றால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள இவர் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment