ஒரே ‘கல்ப்’பில் 4 சோடா பாட்டில் காலி... மடக்-மடக்கென அசால்ட்டாக குடித்துத் தள்ளும் நபர்!

அருகில் இருக்கும் 2 சிறிய கேன்களில் இருக்கும் சோடாக்களை மடக் மடக் என குடித்து பார்ப்பவர்களை பிரம்பிப்படையச் செய்துவிடுகிறார்.

ஃபப்ளிசிட்டிக்காக பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்யும் நபர்களை நாம் கண்டிருப்போம். இணையதளத்தில் மூலம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலர் ஏதாவது செய்து கொண்டு இருப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

அந்த வகையில் இந்த நபர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? 4 கேன் சோடாவை ஒரே ‘கல்ப்’பில் உள்ளே தள்ளியிருக்கிறார். முதலில் இந்த வீடியோவின் தொடக்கத்தில் பார்க்கும் போது, இரண்டு பெரிய கேனில் உள்ள சோடாவை வாயில் வைத்தபடியே காலி செய்துவிடுகிறார் அந்த நபர்.

பின்னர், அவ்வளவு தானே என நினைக்கும் போது, அருகில் இருக்கும் 2 சிறிய கேன்களில் இருக்கும் சோடாக்களை மடக் மடக் என குடித்து பார்ப்பவர்களை பிரம்பிப்படையச் செய்துவிடுகிறார்.

ஷான்காலிஸ்ட் என்பவர் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதை எழுதும் போது கிட்டத்தட்ட 89 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வைரல் அடித்து வரும் வீடியோவை நீங்களும் கொஞ்சம் பாருங்க.

×Close
×Close