Advertisment

பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம்: யார் அந்த கள்ளக்குறிச்சி நபர்?

பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் எழுதிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்த நபர் யார்? எதற்காக இப்படி ஒரு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
chennai airport, threat letter to chennai airport, tamil nadu, kallakurichi

சென்னை விமான நிலையம்

பொதுவாக மிரட்டல் கடிதம் எழுதுபவர்கள் அடையாளத்தை குறிப்பிடாமல் மொட்டை கடிதம்தான் எழுதுவார்கள், ஆனால், சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் பெயர், மொபைல் எண் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்தபோது, அந்த நபர் தன்னை தேடி கள்ளக்குறிச்சி வரும்படி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மேலாளருக்கு அஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொபைல் எல்லாம் குறிப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் எனக்கு சொந்தமான நாடு. இந்த நாட்டில் எனக்கு எங்கும் செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால், நான் சென்னை விமான நிலையத்துக்கு வந்தால் என்னை விமான நிலைய உள்பகுதிக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே உங்களுடைய காவலர்கள் நிறுத்தி விடுகின்றனர். இந்த விமான நிலையம் என்னுடையது. அப்படி இருக்கையில் என்னை ஏன் உள்ளேவிட மறுக்கிறீர்கள்?. நான் விரைவில் மீண்டும் சென்னை வருவேன். அப்போது என்னை உள்ளே அனுமதிக்க வேண்டும். தடுத்து நிறுத்தினால் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இனிமேல் நான் வரும்போது என்னை தடுத்து நிறுத்தக்கூடாது. இது எச்சரிக்கை.” இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக இது போன்ற மிரட்டல் கடிதங்கள் பெயர், மொபைல் எண் எதையும் குறிப்பிடாமல் மொட்டை கடிதம் எழுதுவார்கள். அப்படியே பெயர், மொபைல் எண் குறிப்பிட்டாலும் போலியான பெயர், விவரங்களைக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

விமான நிலையத்திற்கு மிரட்டல் என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த காமெடி கடிதத்தை சென்னை விமான நிலைய மேலாளர், சென்னை விமான நிலைய இயக்குனருக்கு அனுப்பினார். அவர், அந்த காமெடியான மிரட்டல் கடிதத்தை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு இணையதளம் மூலம் புகாராக அனுப்பினார்.

இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார், அந்த கடிதத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். போனை எடுத்த நபரிடம், “நீங்கள் அனுப்பிய கடிதம் தொடர்பாக உங்களை விசாரிக்க வேண்டும். நீங்கள் புறப்பட்டு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்” என்று கூறியுள்ளனர். அதற்கு மறுமுனையில் பேசிய நபர், “முன்னதாகவே தெரிவிக்காமல் இப்படி திடீரென போன் செய்தால் எப்படி?. நான் யாரையும் தேடிச்செல்ல மாட்டேன். என்னிடம் பேச வேண்டும் என்றால், நீங்கள் என்னைத்தேடி கள்ளக்குறிச்சி வாருங்கள்” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு, அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்த போலீசார், கடிதத்தில் உள்ள எழுத்துகள், செல்போனில் பேசியவரின் குரல் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, அவர் வயதான நபர், அந்த நபரின் பெயர் கண்ணன் என்று தெரிய வந்தது.

பொதுவாக மிரட்டல் கடிதம் எழுதுபவர்கள் பெயர், விவரம் எதையும் குறிப்பிடாமல் எழுதுவார்கள். ஆனால், இவர் பெயர், மொபைல் எண் எல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவர் ஏன் இவ்வாறு மிரட்டல் கடிதம் எழுதி இருக்கிறார்? போனில் பேசினாலும் ஏடாகூடமாக பேசுகிறார் என்று போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் எழுதிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண்ண என்பவர் யார்? என கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். எதற்காக இப்படி ஒரு மிரட்டல் கடிதம் எழுதினார்? அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? இல்லை முதுமை காரணமாக புத்தி தடுமாற்றம் காரணமாக இப்படி நடந்து கொள்கிறாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபரைக் கண்டுபிடித்து சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால், பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் எழுதிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்த நபர் யார்? எதற்காக இப்படி ஒரு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment