Advertisment

திருச்சி - தஞ்சை சாலையில் சர்வீஸ் சாலை பணிகளை உடனே தொடங்க கோரிக்கை; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் அரியமங்கலம் பழைய பால்பண்னை வரை சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளை விரைவாகத் தொடங்க வலியுறுத்தி திருச்சி பால் பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருச்சி - தஞ்சை சாலையில் சர்வீஸ் சாலை பணிகளை உடனே தொடங்க கோரிக்கை; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் அரியமங்கலம் பழைய பால்பண்னை வரை சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளை விரைவாகத் தொடங்க வலியுறுத்தி திருச்சி பால் பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பில் திருவெறும்பூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த விபரம் வருமாறு:

Advertisment

திருச்சி - தஞ்சை சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சாலையின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இருக்கின்றன. இதனால், தஞ்சை சாலை எப்போதுமே போக்குவரத்து மிகுந்த மிகவும் நெரிசலுடன், அடிக்கடி பெரும் விபத்துகளை சந்தித்து வருகின்றது. ஒரு கட்டத்தில் இந்த சாலை மரண சாலை என்று அழைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த தேர்தலின்போது அப்பகுதி பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக சர்வீஸ் சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துவேன் என தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி கொடுத்தார். ஏற்கனவே, அதே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போதும் இதே வாக்குறுதியைக் கொடுத்திருந்த நிலையில், அமைச்சராகியும் சர்வீஸ் சாலை விவகாரம் கிணற்றில் போடப்பட்ட கல்லாகத்தான் கிடக்கின்றது.

இதனால், இந்த சாலையில் தினமும் அவ்வப்போது விபத்துகள் நடப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், சர்வீஸ் சாலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி பழைய பால்பண்ணை சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், சண்முகம், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

publive-image

சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் பா.லெனின், நிர்வாகிகள் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், செல்வராஜ், பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர், எஸ்.டி.பி.ஐ ரஹ்மத்துல்லாஹ், நாம் தமிழர் கட்சி சோழசூரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கிடப்பில் உள்ள சர்வீஸ் சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இந்தக் ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசையும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தையும், துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரையும் இந்த ஆர்ப்பாட்டம் வாயிலாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

publive-image

சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி பாதி முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணியை உடனடியாக துவக்கி நிலத்தை கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்தச் சொல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் திட்டம் கிடப்பில் கிடப்பதை சுட்டிக்காட்டி உடனே நடவடிக்கை எடுக்க திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.

சர்வீஸ் ரோடு பணியை தொடர்ந்து செயல்படுத்திட வலியுறுத்தி மாவட்ட, மாநில தலைமையில் போராடுகின்ற அரசியல் கட்சிகளோடும் சமூக அமைப்புகளோடும் இணைந்து போராடுவதற்கு கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பை கொடுப்பது.

சர்வீஸ் ரோடு அமையும் வரை திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகள் நடைபெறும் விபத்துக்களை தடுப்பதற்கு சாலைப் பாதுகாப்பு குறித்து காவல்துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும்.

சர்வீஸ் ரோடு கூட்டமைப்பின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவின்படி பணிகளை துரிதமாத செயல்படுத்த வேண்டும்

2010 ஆண்டு முதல் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கும், உடல் ஊனமுற்ற குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்க

வேண்டும்.

சர்வீஸ் சாலை அமைக்கும் வரை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே வாகனங்களுக்கு வசூலிக்கும் சுங்க கட்டணத்தை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு நிர்வாகிகள், நகர் நலச் சங்கங்கள், அரசியல் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment