Advertisment

9, 10-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு - தமிழக தலைவர்கள் ரியாக்ஷன்ஸ்

Latest Tamilnadu News : 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு ஏழ்மை, பொருளாதார சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest Tamilnadu News, Tamil News

தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2017-2018-ம் கல்வியாண்டில் 100 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மராட்டியம் மற்றும் ராஜஸ்தானின் ஆளும் கட்சி எம்.பி.க்கள் சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி. சவுத்ரி ஆகியோர் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், "ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் 2017 - 2018-ம் கல்வியாண்டில் மட்டும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 16.2 சதவீத மாணவர்கள் படிப்பை கைவிட்டு உள்ளனர்.

ஐ.டி சோதனை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழகத்தில் கடந்த 2016 - 2017-ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயின்ற 8 சதவீத மாணவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளனர்.

2016 - 2017-ம் கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 2017 - 2018-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

வறுமை மற்றும் பொருளாதார நிலை, உடல் ஊனமுற்றோர் அல்லது மோசமான உடல்நலம், வீட்டு வேலைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி வெளியேறுகின்றனர்" என கூறினார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை அமலில் உள்ளது. 9-ம் வகுப்பு முதல் 75 சதவீத வருகைப்பதிவுடன், முழு ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி அடைவர். நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தகவலுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை, வறுமை, பொருளாதார சூழல் போன்ற காரணங்களால் மாணவர்களால் படிப்பைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்று இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் மூலம் எஸ்.எச்.ஏ திட்டத்தில் சேர்த்து, தொடர்ந்து கற்பித்து வருவதாகவும் மாநில பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பழங்குடி சிறுவனை செருப்பு கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: சர்ச்சை வீடியோ

தலைவர்கள் கண்டனம்

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு ஏழ்மை, பொருளாதார சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு காரணமா? என்பது போன்றவற்றை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையனைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10 வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் இடைநிற்றல் 100% அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த வகுப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 8%ஆக இருந்த இடைநிற்றல் 2017-18 கல்வியாண்டில் 16.2%ஆக உயர்ந்திருக்கிறது. அதிலும்,அதிக அளவிலான இடைநிற்றல்கள் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றன. இது, பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதைகாட்டும் குறியீடாகும்

இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, இடைநிற்றலுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டிய கடமை பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. அதற்கான பணிகளில் அவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment