Advertisment

News Highlights: ஏப்.6 முதல் நண்பகல் வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள்

Tamil Nadu (TN) Assembly Election Results 2021 Updates: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
=

Tamil Nadu (TN) Assembly Election Results 2021 Coverage: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் தமிழகம் கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் மொத்தம்  3998 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 70% அதிகமான வாக்குகள் பதிவாகின.

Advertisment

மேலும் தமிழக அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் நடைபெற்ற இந்த தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகிய 5 முதல்வர் வேட்பாளர்கள்  போட்டியிட்டனர். இந்த தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தரப்பில் வசந்த் விஜய் மற்றும் பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக களமிறங்கினர்.

இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அதிமுக தலைவமையில், பாஜக, பாமக, தமக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணயிலும், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியிலும், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்தித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 07:45 (IST) 04 May 2021
    என்னென்ன புதிய கட்டுப்பாடுகள் ?

    மே 6 முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனவும், பயணிகள் ரயில், பேருந்துகள், கார் டாக்ஸிகளில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 07:38 (IST) 04 May 2021
    மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள்!

    தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசால் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 6 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:33 (IST) 03 May 2021
    7ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக

    தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக வரும் 7ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.



  • 20:32 (IST) 03 May 2021
    மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் ஒத்திவைப்பு

    கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வை நடத்துவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.



  • 20:30 (IST) 03 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20952பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20952பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு என்ணிக்கை 12,28,064 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 122 பேர் கொரோனாவிற்கு பலியிகியுள்ளனர். இதில சென்னையில் ஒரே நாளில் 6150 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • 20:29 (IST) 03 May 2021
    ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் மாஸ் அணிந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 19:24 (IST) 03 May 2021
    கவிஞர் வைரமுத்து ஸ்டாலினுக்கு வாழ்த்து

    தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக புதிதாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பல தரப்பினரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், "இன மொழியை மீட்டெடுக்கும் உனது கரம்" - என்று கவிஞர் வைரமுத்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 19:22 (IST) 03 May 2021
    தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அறை காலி செய்யும் பணி

    தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் அறையை காலி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • 19:20 (IST) 03 May 2021
    முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

    தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தஆலோசனையில் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன் முனுசாமி திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.



  • 18:18 (IST) 03 May 2021
    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் சூரி வாழ்த்து

    தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூரி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவருடன் திமுக இளைஞரணி செயலாளரும், தற்போதை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.



  • 18:15 (IST) 03 May 2021
    ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து

    தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



  • 17:31 (IST) 03 May 2021
    பாஜக உடன் கூட்டணி வைத்ததால் அதிமுக, பாமக தோல்வியை சந்தித்தது - திருமாவளவன்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பாஜக உடன் கூட்டணி வைத்ததால் அதிமுக, பாமக தோல்வியை சந்தித்துள்ளன; தமிழகத்தின் சனாதன சக்திகளுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.



  • 16:57 (IST) 03 May 2021
    மம்தா பானர்ஜிக்கு போனில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

    மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றி பெற்றதற்காக, மம்தா பானர்ஜியை நடிகர் ரஜினிகாந்த் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 16:27 (IST) 03 May 2021
    திமுக, அதிமுக வரலாற்றில் புதிய அத்தியாயம்: ஸ்டாலினை போனில் வாழ்த்திய ஓபிஎஸ்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக வரலாற்றில் புதிய அத்தியாயமாக தேர்தல் வெற்றிக்கு அதிமுக தலைவர் ஒருவர் திமுக தலைவரை போனில் வாழ்த்துவது இதுதான் முதல்முறை.



  • 16:24 (IST) 03 May 2021
    திமுக, அதிமுக வரலாற்றில் புதிய அத்தியாயம்: ஸ்டாலினை போனில் வாழ்த்திய ஓபிஎஸ்

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதிமுக திமுக வரலாற்றில் புதிய அத்தியாயமாக தேர்தல் வெற்றிக்கு அதிமுக தலைவர் ஒருவர் திமுக தலைவரை போனில் வாழ்த்துவது இதுதான் முதல்முறை.



  • 15:21 (IST) 03 May 2021
    மு.க. ஸ்டாலினுக்கு கலைப்புலி தாணு வாழ்த்து

    கருணாநிதியின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து, வருங்கால தலைமுறைக்கான தலைவரென, ஸ்டாலின் முத்திரை பதிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 15:01 (IST) 03 May 2021
    புதுச்சேரி மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன் - நாராயணசாமி

    புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.



  • 14:11 (IST) 03 May 2021
    மறுவாக்கு எண்ணிக்கையை யாரும் கோரவில்லை- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

    தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகள் கோரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களான வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி ஆகியோரின் அடுத்தகட்ட முடிவு அவர்கள் கையில் எனவும் தெரிவித்துள்ளார்.



  • 14:06 (IST) 03 May 2021
    தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம் ராஜினாமா

    தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்ததை அவர் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார்.



  • 13:44 (IST) 03 May 2021
    16 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்றது

    புதுச்சேரி மாநில முதல்வராக வெள்ளி அல்லது ஞாயிறு அன்று ரங்கசாமி பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்றது. நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி ஆகியோர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு



  • 13:42 (IST) 03 May 2021
    தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கை வரவில்லை - சத்யபிரதா சாஹூ

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை ஏதும் வரவில்லை என்று அவர் கூறினார்.



  • 13:24 (IST) 03 May 2021
    புதுவையில் முதல்வர் யார்?

    புதுவையில் முதல்வர் பொறுப்பு வகிக்க இருப்பது யார் என்று குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குர்மார் சுரானா, எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி முதல்வர் யார் என்ற முடிவை எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.



  • 13:08 (IST) 03 May 2021
    ஆழ்வார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

    முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார்.



  • 12:26 (IST) 03 May 2021
    நல்லாட்சியை வழங்க ஸ்டாலினுக்கு விசிக முழு ஒத்துழைப்பு வழங்கும்

    பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். புதிய சின்னத்தில் போட்டியிட்ட வி.சி.க. 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றும் நல்லாட்சியை வழங்கக் கூடிய ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு என்றும் தொல்திருமாவளவன் கூறியுள்ளார்.



  • 12:23 (IST) 03 May 2021
    கே.எஸ். அழகிரி வாழ்த்து

    முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டார் கே.எஸ். அழகிரி

    முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிற ஆற்றலும், அனுபவமும் மிக்க திரு. @mkstalin அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

    — KS_Alagiri (@KS_Alagiri) May 3, 2021


  • 11:48 (IST) 03 May 2021
    ஸ்டாலினை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!

    தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றிப் பெற்றதை அடுத்து ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது, கொரோனா கொடுந்துயரத்திலிருந்து தமிழகத்தை மீட்பதே ஸ்டாலின் முதன்மை பணி என அவர் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.



  • 11:36 (IST) 03 May 2021
    தவறை சரிசெய்ய முயலுங்கள்; உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுரை!

    கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால், அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. கொலைகுற்றம் சுமத்தினாலும் குற்றமில்லை என வாய்மொழி கருத்தாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அந்த வார்த்தையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • 11:26 (IST) 03 May 2021
    நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மறுபக்கம் எதிர்க்கட்சி; ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை!

    நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி என ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அதிமுக சார்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ, அவற்றை செவ்வனச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.



  • 11:21 (IST) 03 May 2021
    நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மறுபக்கம் எதிர்க்கட்சி; ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை!

    நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி என ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அதிமுக சார்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ, அவற்றை செவ்வனச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.



  • 11:17 (IST) 03 May 2021
    ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்; எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் பதில்!

    தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியை தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை எனவும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.



  • 11:10 (IST) 03 May 2021
    புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம்?

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணன் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். இதனை அடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் தேர்வு செய்ய வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 10:56 (IST) 03 May 2021
    20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் பாஜக!

    பாஜக சார்பில் போட்டியிட்ட சி.கே.சரஸ்வரி. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகிய நால்வரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு நுழைகிறது, பாரதிய ஜனதா கட்சி



  • 10:45 (IST) 03 May 2021
    ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!

    தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காபந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 10:43 (IST) 03 May 2021
    ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!

    தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காபந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 10:37 (IST) 03 May 2021
    அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு!

    தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் சென்ற நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



  • 10:35 (IST) 03 May 2021
    எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா கடிதம்!

    தேர்தல் தோல்வியை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். இன்று நன்பகலில் அந்த கடிதம் ஆளுநர் வசம் கிடைக்கப் பெறும் சூழலில், ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்பார்.



  • 10:32 (IST) 03 May 2021
    வரும் 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

    வரும் 7-ம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



  • 09:52 (IST) 03 May 2021
    இந்தியாவில் 3500-ஐ நெருங்கியது கொரோனா பலி!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 3,417 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 09:48 (IST) 03 May 2021
    விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றி!

    மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:25 (IST) 03 May 2021
    மக்களுக்காக உயிருள்ள வரை உழைப்பேன்; செல்லூர் ராஜூ பேட்டி!

    மதுரை மேற்கு தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ள அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ, வெற்றிப் பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்காக உயிருள்ள வரை உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.



  • 09:22 (IST) 03 May 2021
    மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு; இலங்கை எம்.பி. ஸ்டாலினுக்கு வாழ்த்து

    தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என ஸ்டாலினை வாழ்த்திய பின், இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • 08:56 (IST) 03 May 2021
    மலேசிய அமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து!

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மலேசிய மனித வளத் துறை அமைச்சர் டத்தோ சரவணன் வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம் என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



  • 08:50 (IST) 03 May 2021
    அமைச்சர் சரோஜா, பெஞ்சமின் தோல்வி!

    சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். மதுரவாயில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெஞ்சமினும் தோல்வியுற்றுள்ளார்.



  • 07:27 (IST) 03 May 2021
    15 இடங்களில் காங்கிரஸ் வெற்றி!

    திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, 15 இடங்களில் வெற்றியையும், 3 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது.



  • 07:24 (IST) 03 May 2021
    112 தொகுதிகளில் திமுக வெற்றி!

    110 இடங்களில் திமுக வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னிலையில் இருந்த 22 தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெற்றி உறிதியாகி இருப்பதால், 20 இடங்களில் முன்னிலையுடன் 112 இடங்களில் தனித்த வெற்றியை திமுக பெற்றுள்ளது.



  • 07:21 (IST) 03 May 2021
    61 இடங்களில் அதிமுக வெற்றி!

    அதிமுக தனித்து 61 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 இடங்களில் முன்னிலை என்ற நிலை மாறி, 2 இடங்களில் வெற்றியுடன் 6 இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.



  • 07:20 (IST) 03 May 2021
    61 இடங்களில் அதிமுக வெற்றி!

    அதிமுக தனித்து 61 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 இடங்களில் முன்னிலை என்ற நிலை மாறி, 2 இடங்களில் வெற்றியுடன் 6 இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.



  • 06:47 (IST) 03 May 2021
    4.2% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ்!

    திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, 13 தொகுதிகளில் முழு வெற்றியையும், 5 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்து வருகின்றனர். இதுவரையில், 4.2% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 06:45 (IST) 03 May 2021
    3.8% வாக்குகளைப் பெற்ற பா.ம.க!

    4 தொகுதிகளில் வெற்றியையும், 1 தொகுதியில் முன்னிலையிலும் இருந்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, பதிவான வாக்குகளில் 3.88%வாக்குகளை பெற்றுள்ளது.



  • 06:42 (IST) 03 May 2021
    2% வாக்குகளைப் பெற்ற பாஜக!

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்ட பாஜக, 3 தொகுதிகளில் வெற்றியையும், 1 தொகுதியில் முன்னிலையிலும் இருந்து வந்தாலும், பதிவான வாக்குகளில் 2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.



  • 06:39 (IST) 03 May 2021
    33% வாக்குகளை பெற்ற அதிமுக!

    59 இடங்களில் முழு வெற்றியையும், 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள அதிமுக, தேர்தலில் பதிவான வாக்குகளில் 33% வாக்குகளைப் பெற்றுள்ளது.



  • 06:36 (IST) 03 May 2021
    37% வாக்குகளை பெற்ற திமுக!

    110 இடங்களில் முழு வெற்றியையும், 22 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் 37% வாக்குகளை பெற்றுள்ளது.



  • 06:35 (IST) 03 May 2021
    110 இடங்களில் திமுக வெற்றி!

    திமுக 110 இடங்களில் முழு வெற்றியையும், 22 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்து வருகின்றனர். மொத்தமாக 132 இடங்களில் திமுக வெற்றி உறுதியாகி உள்ளது.



  • 06:32 (IST) 03 May 2021
    59 இடங்களில் அதிமுக வெற்றி !

    அதிமுக வேட்பாளரக்ள் 59 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ளனர். தொடர்ந்து 8 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.



  • 00:32 (IST) 03 May 2021
    எளிமையாக பதவியேற்பு விழா இருக்கும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இது கொரோனா காலம் என்பதால் மிக எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்” என்று கூறினார்.



  • 00:11 (IST) 03 May 2021
    வாக்களிக்காதவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் பணியாற்றுவோம் - மு.க.ஸ்டாலின்

    கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி. 10 ஆண்டு காலம் தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயுள்ளது. தமிககத்தை மீட்போம். எதிர்பார்ப்பு நம்பிக்கைக்கு ஏற்றவாறு பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். கருணாநிதி வழி நின்று 6வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறோம். கருணாநிதி தலைமையில் 6வது ஆட்சி ஏக்கம் நிறைவேறியுள்ளது. வாக்களிக்காதவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் பணியாற்றுவோம்.” என்று கூறினார்.



  • 23:42 (IST) 02 May 2021
    வெற்றி சான்றிதழை பெற்றார் மு.க.ஸ்டாலின்

    கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.



  • 23:11 (IST) 02 May 2021
    மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம் - பாமக டாக்டர் ராமதாஸ்

    மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்; பாமகவின் மக்கள் பணி தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



  • 22:55 (IST) 02 May 2021
    சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வெற்றி

    சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியைவிட 25,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.



  • 22:53 (IST) 02 May 2021
    பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி

    பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி 21,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



  • 22:31 (IST) 02 May 2021
    கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி; பிரதமர் மோடி

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.



  • 22:04 (IST) 02 May 2021
    கோவில்பட்டி தொகுதில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு வெற்றி; டிடிவி தினகரன் தோல்வி

    கோவில்பட்டி தொகுதில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 68,556 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 56,153 வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 37,380 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



  • 21:43 (IST) 02 May 2021
    வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி வெற்றி

    வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார்.



  • 21:42 (IST) 02 May 2021
    மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா 37,614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா 37,614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து 2வதுமுறையாக மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.



  • 21:40 (IST) 02 May 2021
    எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    1 லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகளும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69352 வாக்குகளும் பெற்றனர்.

    இதில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 93 ஆயிரத்து 802 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் தனலிங்கம் அறிவித்து அதற்கான சான்றிதழை அதிமுக தலைமை முகவர் வழக்கறிஞர் தங்கமணியிடம் வழங்கினார்.



  • 21:36 (IST) 02 May 2021
    திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நல்லதம்பி வெற்றி

    திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நல்லதம்பி, பாமக வேட்பாளர் ராஜாவை விட 28471 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.



  • 21:34 (IST) 02 May 2021
    30 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் தொகுதியை திமுக கைப்பற்றியது

    சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ராஜலட்சுமியை வீழ்த்தினார். 30 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் தொகுதியை திமுக கைப்பற்றியது.



  • 21:32 (IST) 02 May 2021
    மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்... தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்... தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.



  • 21:26 (IST) 02 May 2021
    காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி

    காட்பாடியில் தொகுதியில் தொடர்ந்து சில 100 வாக்குகள் பின்னடைவை சந்தித்துவந்த துரைமுருகன் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



  • 21:21 (IST) 02 May 2021
    கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி; கமல்ஹாசன் தோல்வி

    கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.



  • 21:16 (IST) 02 May 2021
    செய்யாறு தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதி வெற்றி

    செய்யாறு தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதி, அதிமுக வேட்பாளர் தூசி கே. மோகனை 12271 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.



  • 21:15 (IST) 02 May 2021
    ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி வெற்றி

    ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனைவிட 18726 வாக்குகுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



  • 21:13 (IST) 02 May 2021
    திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி

    திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றுள்ளார்.



  • 19:28 (IST) 02 May 2021
    அமைச்சர் எம்.சி.சம்பத் தோல்வி

    கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன், அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத்தை விட 5151 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி. அம்பாசமுத்திரத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆவுடையப்பன் தோல்வி .ஆவுடையப்பனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வெற்றி



  • 19:25 (IST) 02 May 2021
    வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் வெற்றி

    வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன், திமுக வேட்பாளர் வேதரெத்தினத்தை விட 12327 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி. ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி வெற்றி



  • 18:58 (IST) 02 May 2021
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ், திமுக கூட்டணி காங். வேட்பாளர் மாதவராவை விட 12738 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாதவராவ் தேர்தலின்போது உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் பாரதியை விட 14825 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி. ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க பாண்டியன், அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியை விட 3658 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி .



  • 18:42 (IST) 02 May 2021
    பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

    பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி . கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை விட 21042 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி. விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை விட 21339 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி. சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாண்டியன், திமுக கூட்டணி ஐயூஎம்எல் வேட்பாளர் அப்துல் ரகுமானைவிட 15,667 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி



  • 18:25 (IST) 02 May 2021
    திருவண்ணாமலை தொகுதியில் ஏ.வ.வேலு வெற்றி

    திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி



  • 18:24 (IST) 02 May 2021
    நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி

    நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி பெற்றுள்ளார். செங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிரி அதிமுக வேட்பாளர் நைனாக்கண்ணுவை விட 11570 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா வெற்றி



  • 18:15 (IST) 02 May 2021
    அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி

    அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி. பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகரன், அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வனை விட 31,036 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி . அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வெற்றி. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வெற்றி



  • 17:54 (IST) 02 May 2021
    திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி-ஸ்டாலின்

    திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பேன் எனவும், திமுகவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த மாபெரும் வெற்றி எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 17:50 (IST) 02 May 2021
    நாகை தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி

    நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7238 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஷா நவாஸ்க்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 17:46 (IST) 02 May 2021
    கந்தர்வகோட்டை சிபிஎம், திருவாடானை காங்கிரஸ் வெற்றி

    திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் வெற்றி . அதிமுக வேட்பாளர் ஆனிமுத்துவை விட 12830 வாக்குகள் கூடுதலாக பெற்று கருமாணிக்கம் வெற்றி. அதேபோல் கந்தர்வகோட்டை தொகுதியில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சின்னதுரை வெற்றி பெற்றுள்ளார்.



  • 17:44 (IST) 02 May 2021
    நாகை தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி

    நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7238 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஷா நவாஸ்க்கு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 17:24 (IST) 02 May 2021
    திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் பொன்முடி வெற்றி

    திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை வெற்றி பெற்றுள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி



  • 17:22 (IST) 02 May 2021
    திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் பொன்முடி வெற்றி

    திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை வெற்றி பெற்றுள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி



  • 17:13 (IST) 02 May 2021
    அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி

    திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வரதராஜனை விட 1782 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



  • 17:00 (IST) 02 May 2021
    கே.வி.குப்பம் தொகுதியில் வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி

    கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். குடியாத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் அமலு வெற்றி பெற்றுள்ளார்



  • 16:54 (IST) 02 May 2021
    திருத்துறைப்பூண்டியில் இ.கம்யூ. வேட்பாளர் மாரிமுத்து வெற்றி

    திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளார்.



  • 16:32 (IST) 02 May 2021
    அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி

    ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரான அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியை தழுவியுள்ளார்.



  • 16:32 (IST) 02 May 2021
    திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் வெற்றி!

    திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து வெற்றிப் பெற்றுள்ளார்.



  • 16:30 (IST) 02 May 2021
    வாணியம்பாடியில் அதிமுக வெற்றி!

    வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:27 (IST) 02 May 2021
    கன்னியாகுமரி இடைத்தேர்தல்; காங்கிரஸ் விஜய் வசந்த முன்னிலை!

    கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1 லட்சத்து 12 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.



  • 16:25 (IST) 02 May 2021
    ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வாழ்த்து!

    வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி முகத்தோடு ஆட்சி அமைக்கும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 15:54 (IST) 02 May 2021
    வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி

    வால்பாறையில் வெற்றிச் சான்றிதழை பெற்றார் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி



  • 15:46 (IST) 02 May 2021
    பவானிசாகர் தொகுதியில் அதிமுக வெற்றி

    பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 16008 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளார்.



  • 15:18 (IST) 02 May 2021
    25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விளாத்திகுளம் தொகுதியை கைப்பற்றுகிறது திமுக

    25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விளாத்திகுளம் தொகுதியை திமுக கைப்பற்றுகிறது. விளாத்திக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



  • 15:15 (IST) 02 May 2021
    துரைமுருகன் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் 170 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.



  • 15:07 (IST) 02 May 2021
    கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 16985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



  • 14:43 (IST) 02 May 2021
    ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புக்கு தொடர்ந்து பின்னடைவு

    ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கு திமுக வேட்பாளர் எழிலன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.



  • 14:26 (IST) 02 May 2021
    வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் - ஸ்டாலின்

    வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். கொரோனா காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும். இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



  • 14:19 (IST) 02 May 2021
    கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் 22,569 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 22,569 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 11வது சுற்று முடிவில் ஸ்டாலின் பெற்ற வாக்குகள் - 32,747 அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் பெற்ற வாக்குகள் - 13,374



  • 13:53 (IST) 02 May 2021
    தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி

    தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அண்ணா அறிவாலயம் முன் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 13:52 (IST) 02 May 2021
    தேனாம்பேட்டை காவல் ஆணையர் முரளி பணியிடை நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி

    தேனாம்பேட்டை காவல் ஆணையர் முரளி பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அண்ணா அறிவாலயம் முன் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 13:49 (IST) 02 May 2021
    தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி

    தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அண்ணா அறிவாலயம் முன் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 13:47 (IST) 02 May 2021
    திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவு

    திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் முன்னிலை பெற்றுள்ளார். 9,066 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜனை விட முன்னிலையில் உள்ளார்.



  • 13:41 (IST) 02 May 2021
    துறைமுகம் தொகுதியில் சேகர் பாபு முன்னிலை

    துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் வினோஜ் பி செல்வம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்



  • 13:36 (IST) 02 May 2021
    நெல்லையில் பாஜக முன்னிலை

    திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 32,221 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட எ.எல்.எஸ். லட்சுமணன் 22561 வாக்குகளை பெற்றிருக்கிறார்.



  • 13:24 (IST) 02 May 2021
    கமல் ஹாசன் முன்னிலை

    கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் 2,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



  • 13:23 (IST) 02 May 2021
    மகேஷ் பொய்யாமொழி முன்னிலை

    திருவெறும்பூர் தொகுதியில் 6வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி 11,364 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.



  • 13:19 (IST) 02 May 2021
    முன்னிலை பெற்ற ஓ. பன்னீர்செல்வம்

    போடி தொகுதியில் சில மணி நேரங்கள் வரை திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை பெற்று வந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் முன்னிலை பெற்று வருகிறார்.



  • 12:50 (IST) 02 May 2021
    ஊரடங்கிற்கு மத்தியிலும் களை கட்டிய அறிவாலயம்

    இந்த தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது அறிவாலயம். வீட்டில் இருப்போம். வெற்றியை கொண்டாடுவோம் என்று ஸ்டாலின் கூறிய நிலையிலும் நூற்றுக் கணக்கான தொண்டர்கள் அறிவாலயத்தில் குவிந்தனர்.



  • 12:49 (IST) 02 May 2021
    அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை

    கோபி தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையின் 6167 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.



  • 12:42 (IST) 02 May 2021
    துரைமுருகன் பின்னடைவு

    காட்பாடி தொகுதியில் 5வது சுற்று முடிவுகள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் திமுக வேட்பாளர் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.



  • 12:41 (IST) 02 May 2021
    சி.வி. சண்முகத்திற்கு பின்னடைவு

    விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 5வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 1362 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.



  • 12:27 (IST) 02 May 2021
    திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

    இதுவரை நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதிமுகவை தொடர்ந்து 3வது இடத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.



  • 12:22 (IST) 02 May 2021
    தங்கம் தென்னரசு முன்னிலை

    திருச்சுழி சட்டமன்றத்தில் 23547 வாக்குகள் பெற்று தங்கம் தென்னரசு முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராஜசேகர் 10106 வாக்குகளை பெற்றுள்ளார்.



  • 12:07 (IST) 02 May 2021
    மண்டலம் வாரியாக முன்னிலை பெறும் திமுக; மேற்கு மண்டலத்தில் வலுப்பெறும் அதிமுக

    தென்மண்டலம் - திமுக 32, அதிமுக 19 தொகுதிகளில் முன்னிலை. வடக்கு மண்டலம்- திமுக 57, அதிமுக 43 இடங்களில் முன்னிலை. மத்திய மண்டலம் - திமுக 32, அதிமுக 9 இடங்களில் முன்னிலை. மேற்கு மண்டலம் - அதிமுக 29, திமுக 12 இடங்களில் முன்னிலை.



  • 12:06 (IST) 02 May 2021
    கரூர் சட்டமன்றம் முன்னிலை வகிக்கும் செந்தில் பாலாஜி

    கரூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. செந்தில் பாலாஜி 12061 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 11632 வாக்குகளை பெற்றுள்ளார்.



  • 12:02 (IST) 02 May 2021
    எடப்பாடியில் முன்னிலை வகிக்கும் முதல்வர்

    ஆறாம் சுற்று முடிவில் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக வேட்பாளர் சம்பத்குமாரைக் காட்டிலும் 24,565 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

    edappadi: At the end of the sixth round, Chief Minister Edappadi K Palaniswami us leading by 24,565 votes against DMK's Sambathkumar. tnelections2021 tnassemblyelection2021 @IndianExpress @IeTamil

    — Janardhan Koushik (@koushiktweets) May 2, 2021


  • 11:47 (IST) 02 May 2021
    விருகம்பாக்கம் முன்னிலை நிலவரம்

    விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.வி. பிரபாகர ராஜா முன்னிலை வகித்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட சினேகனுக்கு 1997 வாக்குகள் கிடைத்துள்ளன.



  • 11:22 (IST) 02 May 2021
    புதுக்கோட்டை தொகுதியில் அதிமுகவினர் திமுகவினர் இடையே வாக்குவாதம்

    புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குகளில் குளறுபடி இருப்பதாக திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



  • 10:42 (IST) 02 May 2021
    கோவில்பட்டி தொகுதி முடிவுகள்

    கோவில்பட்டி தொகுதியில் 2வது சுற்று முடிவில் கடம்பூர் ராஜூ முன்னிலை பெற்றுள்ளார்.



  • 10:38 (IST) 02 May 2021
    போடி தொகுதியில் இறக்கம் காணும் பன்னீர்செல்வம்

    போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை பெற்றுள்ளார்.



  • 10:36 (IST) 02 May 2021
    128 தொகுதிகளில் முன்னிலை வகுக்கிறது திமுக

    231 தொகுதிகளில் 128 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. 103 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் கமல் ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.



  • 10:34 (IST) 02 May 2021
    கோவை வந்தடைந்தார் கமல் ஹாசன்

    இன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமல் ஹாசன் கோவை வருகை



  • 10:27 (IST) 02 May 2021
    வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் அதிமுகவினர் மோதல்

    புதுக்கோட்டை மாவட்டம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதியான விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவினர், திமுகவினர் இடையே மோதல்.



  • 08:48 (IST) 02 May 2021
    திருவள்ளூரில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது



  • 08:30 (IST) 02 May 2021
    வாக்கு எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்

    சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்.



  • 08:24 (IST) 02 May 2021
    சிதம்பரத்தில் செய்தியாளர்கள் போராட்டம்

    சிதம்பரம் அருகே சி. முட்லூர் முத்தூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    அங்குள்ள செய்தியாளர்கள் அறையில் எவ்வித வசதியும் இல்லாததால் அறையை விட்டு வெளியே வந்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த வட்டாட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஜெராக்ஸ் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்த பின் அறைக்கு உள்ளே சென்றனர்.



  • 08:13 (IST) 02 May 2021
    தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றுகளிலும் 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.



  • 08:09 (IST) 02 May 2021
    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.



  • 08:05 (IST) 02 May 2021
    கொளத்தூரில் அலுவலர் மாற்றம்

    கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் புதிய அதிகாரியாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 08:01 (IST) 02 May 2021
    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.



  • 07:52 (IST) 02 May 2021
    பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

    வாக்கு எண்ணிக்கை மற்றும் ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.



  • 07:31 (IST) 02 May 2021
    கன்னியாகுமரியில் பாஜகவினர் வாக்குவாதம்

    கன்னியாகுமரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்பு நுழைவுச் சீட்டில் குறைவான பாதிப்பில்லை என முத்திரை இடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று தேவை என அதிகாரிகள் கேட்டதால் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 07:22 (IST) 02 May 2021
    பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

    சென்னையில் 3 மையங்கள் உள்பட 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்



  • 07:20 (IST) 02 May 2021
    காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.



Tamilnadu Election 2021 Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment