Advertisment

2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் : ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் விவரம்!

கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் :  ஆளுநர் உரை சிறப்பம்சங்கள் விவரம்!

tn assembly tamilnadu assembly 2021 : 2021 -ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

Advertisment

கொரோனா சூழல் காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்க, இந்த முறையும் சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆங்கில உரையை சபாநாயகர் தனபால் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெறும் நிலையில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதனால் ஆளுநர் உரையிலும் இடைக்கால பட்ஜெட்டிலும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் தொடக்கம் முதலே இருந்தன.

அத்துடன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பும் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.இந்நிலையில், ஆளுநர் உரை தொடங்கும் முன்பே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்

கூடத்தொடர் லைவ் அப்டேட்ஸ்

கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆளுநர் உரை தொடங்கியது.

ஆளுநர் உரை சிறப்பம்சங்கள்:

* மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

* கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது

* தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது .முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது

* அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்

* இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதி.

* இலங்கையில் உள்ள 18 மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது .தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

* காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் .நுண்ணுயிர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது

* கேரள அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

* கோவையில் கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் இடையே ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்

* பொதுமக்கள், தமிழக அரசின் சேவைகளை பெற 1100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்

* கொரோனா காலத்திலும், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டது. பட்டாசு தொழிலாளர்களை காக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment