Advertisment

மின்வாரிய முறைகேடு: புதிய ஆவணங்களை வெளியிட்ட அண்ணாமலை

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக ரூபாய் 355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன் முறைகேடாக ரூபாய் 4472 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளதாக அண்ணாமலை விமர்சனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மின்வாரிய முறைகேடு: புதிய ஆவணங்களை வெளியிட்ட அண்ணாமலை

தமிழக மின் துறையில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி வருகிறார். அதே போல், முதல்வரின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை அவதூறு பரப்பிவருவதாக திமுக தரப்பில் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

இந்த இரண்டு குற்றச்சாட்டு தொடர்பாக இன்று சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், "பிஜிஆர் உடனான ஒப்பந்தம் மூலம் நஷ்டம்தான் வரும் என்று tangedco கூறிய பிறகும் முதல்வர் tangedcovஐ கட்டாயப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக ரூபாய் 355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன் முறைகேடாக ரூபாய் 4472 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது

திமுகவின் அவதூறு வழக்குகள் அனைத்தையும் எதிர்கொள்ள வழி மீது விளி வைத்து காத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அனுப்புங்கள், மொத்தமாக சந்திக்கிறேன். நிதி அமைச்சருக்கு தான் அனைத்தும் தெரியும். ஆனால் , முதல்வரின் துபாய் பயணத்தில் நிதி அமைச்சர் பங்கு பெறவில்லை. முதல்வரின் மருமகன் சபரீசன் தான் அவரை வரவேற்றார். முதலமைச்சர் தனது குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது, அவரது தனிப்பட்ட ஆடிட்டரும் சென்றுள்ளார்.

8 மாதமாக நடைபெற்றுவரும் துபாய் எஸ்போவில் கடைசி வாரத்தில்போது தமிழகத்தின் அரங்கை திறந்துவைத்தது ஏன்? அவர்களின் மடியில் கணம் உள்ளது. அதை மறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள்.

அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்ததாக திமுக அமைப்பு செயலாளர் கூறியுள்ளார். உண்மையில் உங்களுக்கு தெம்பு இருந்தால் 6 மணி நேரத்தில் என்னை கமலாலயத்தில் வந்து கைது செய்யுங்கள். அப்படி 6 மணி நேரத்தில் என்னை கைது செய்யவில்லை என்றால், நீங்கள் சொல்வதை இனிமேல் தமிழகத்தில் யாரும் கேட்க மாட்டார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஆர்.எஸ் பாரதிக்கு அறிவு உள்ளதா ? என் மீது defamation notice முதல்வர் கொடுக்கலாம் அல்லது அட்டர்னி ஜெனரல் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்க சட்டத்தில் அனுமதியில்லை.

publive-image

திமுக எம்.பி வில்சன் என்னிடம் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, வில்சன் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.610 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் மற்றும் இரண்டு டப்பா தான் இருக்கிறது. என்னிடம் ரூ. 610 கோடி இல்லை. நான் ரூ.610 கோடிக்கு வொர்த் இல்லை. தொட்டம் பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டுப் பார்க்கட்டும்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment