ஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக தலைமை செயலாளர்... காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை.

தமிழக செயலாளர் மற்றும் தலைமை வழக்கறிஞருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்த விவரங்களை ஆலோசிக்க இன்று சந்திக்கின்றனர்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 6 வாரங்கள் கெடு விடுத்தது. 6 வாரக் கெடு முடிவைந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் தமிழகத்தின் விவசாய நலனுக்காக எடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் வரும் 3ம் தேதி தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் போராட்டத்தில் களம் இறங்கிய மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

தற்போது இவ்விவகாரம் குறித்து தீர்ப்பின் விவரங்களை அளிக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு நிலவி வரும் சூழலில் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைத் தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கின்றனர்.

இந்தச் சந்திப்பில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை அமைக்கக் கோரிய தீர்ப்பு மற்றும் தமிழகத்தில் இந்த விவகாரத்தில் நிலவி வரும் சூழல் குறித்துப் பேசப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

×Close
×Close