90 தமிழ் அறிஞர்களுக்கு தமிழக முதல்வர் விருதுகள் வழக்கினார்.

90 தமிழ் அறிஞர்களுக்கு நேற்று தலைமை செயலகத்தில் தமிழ் அறிஞர்கள் விருது வழங்கும் விழா முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் 90 தமிழ் அறிஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கினார். 2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 90 விருதுகளை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.

தமிழ்த்தாய் விருதுக்கான தேர்வை பெங்களூரு தமிழ்ச் சங்கம் பெற்றுள்ளது. இந்த விருதுக்கான தொகை ரூ. 5 லட்சம். இதன் காசோலை, கேடயம் உள்ளிட்ட பரிசுகளை அச்சங்கத்தின் நிர்வாகிகள் பெற்றன.

2017-ம் ஆண்டுக்கான ‘கபிலர் விருது’ கல்வெட்டு ஆய்வாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன், அகழாய்வுத் துறை ஆய்வாளர் ச.கிருஷ்ணமூர்த்திக்கு ‘உ.வே.சா. விருது’, தமிழறிஞர் சுகி.சிவத்துக்கு ‘கம்பர் விருது’, தமிழ் சமூகப்பணி ஆற்றிவரும் வைகைச்செல்வனுக்கு ‘சொல்லின் செல்வர் விருது’, சிறந்த மொழி பெயர்ப்பாளர் கோ.ராஜேஸ்வரி கோதண்டத்துக்கு ‘ஜி.யு.போப் விருது’, ஹாஜி எம்.முகம்மது யூசுப்புக்கு உமறுப்புலவர் விருது, வெ.நல்லதம்பிக்கு ‘இளங்கோவடிகள் விருது’, சிங்கப்பூர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமிக்கு ‘அம்மா இலக்கிய விருது’ ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.

விருது பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’கள் நெல்லை சு.முத்து, தி.வ.தெய்வசிகாமணி, ஆ.செல்வராசு என்கிற குறிஞ்சிவேலன், ஆனைவாரி ஆனந்தன், சச்சிதானந்தம், வசந்தா சியாமளம், இரா.கு.ஆல்துரை, பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன், ஆண்டாள் பிரியதர்சினி, தர்லோசன்சிங் பேடி, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான ‘இலக்கிய விருது’ ஆஸ்திரேலியாவை சேர்ந்த சந்திரிகா சுப்ரமணியன், ‘இலக்கண விருது’ ஜெர்மனியை சேர்ந்த உல்ரிகே நிகோலஸ், ‘மொழியியல் விருது’ ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆகியோர் பெற்றனர். இவ்வாறு 90 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் இரா.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விஜயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close