Advertisment

கெயில் எதிர்ப்பு; தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு ரூ5 லட்சம்: ஸ்டாலின்

கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை; முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Mk Stalin

TN CM Stalin condoles farmer’s death and announces compensation: கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த விவசாயிக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Advertisment

கடந்த வாரம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள கரியப்பனள்ளி கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தும் இடத்தில் கணேசன் என்ற 43 வயது விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கேள்விப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் விவசாயி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்: வொய்ஃப் தொல்லை தாங்க முடியலை…’ சொந்த காருக்கு தீ வைத்த பா.ஜ.க பிரமுகர்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றத் தோழனாக இருக்கும், என கூறப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணங்கள் இருந்தால் ஆலோசனைகளைப் பெற மாநில சுகாதார உதவி எண் - 104 - மற்றும் சினேகா ஆலோசனை மையம்- 044-2464 0050 தொடர்பு கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Dharmapuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment