Advertisment

போக்குவரத்து, ஆவின், இ.பி பணிகளுக்கும் இனி TNPSC தேர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யே இனி நிரப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN gov passed amendment to bring all appointments made in State Government institution, corporation under TNPSC

TNPSC: சென்னை கலைவாணர் அரங்கில் 5ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை துவங்கியது. ஆளுநருடன் துவங்கிய தமிழக சட்டப்பேரவை கொரோனா தொற்று காரணமாக இன்றுடன் நிறைவுற்றது. தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த இரண்டு நாட்களில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. சில சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

Advertisment

தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யே இனி நிரப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பழனிவேல் தியாகராஜன் டி.என்.பி.எஸ்.சி. திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

"அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமான ஆட்சேர்க்கையானது விண்ணப்பதாரர்களின் தேர்வு முறையில் ஒத்தத் தன்மையை கொண்டு வரும் மற்றும் அத்தகைய பணிகளுக்கு மாநிலத்தின் கிராமப்புறங்களில் மற்றும் ஒதுக்குப்புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிப்பதை இயல செய்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் அத்தகைய ஆட்சேர்ப்பினை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் அதிகார அமைப்புகளில் எழும் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் நிபுணத்துவத்தை பேண முடியும்" என்று நோக்கக் காரண விளக்க உரையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment