தீபாவளிக்கு இந்த டயத்துல பட்டாசு வெடிங்க….மகிழ்ச்சியா இருங்க

பட்டாசு வெடிக்கும் நேரம் : காலை 6- 7 , மாலை 7-8 . இந்தியாவில் , தமிழகம் ஒரு மாநிலத்திற்கு மட்டும் இந்த விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

By: October 23, 2019, 6:07:43 PM

எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகைத் திருநாளுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்கி வீட்டில் வைத்து வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி அரசு தரப்பில் இருந்து வந்துள்ளது. கடந்த வருடத்தைப் போன்றே ;  காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் , மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தீபாவளி பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அள்ளித்துள்ளது.

மேலும், பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற முக்கிய பொது இடங்களுக்கு அருகில் வெடி வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகளில் நெருப்பு பிடிக்கா வண்ணம் வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பசுமை பட்டாசு என்றால் என்ன ? வீடியோ : 

 

கடந்த வருடம், உச்ச நீதிமன்றம் தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரத்தை கணிசமாக குறைத்தது. இரவு  8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால், தமிழகத்தில் காலை நேரங்களில் வெடி வெடிக்கும் பழக்கம் இருப்பதால், தமிழகத்திற்கும் மட்டும் அந்த இரண்டு மணி நேரத்தை எப்போதும் வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருந்தது.  இந்தியாவில் , தமிழகம் ஒரு மாநிலத்திற்கு மட்டும் இந்த விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், கடந்த வருடம் தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6-7 , மாலை 7-8 என்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது தமிழக அரசு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn govt announced diwali crackers bursting time in tamil nadu diwali crackers news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X