Advertisment

TN HSC Plus One Result 2018: பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

+1 Result, TN HSC Plus One Result 2018 at dge.tn.nic.in: மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, 16 மற்றும் 17ம் தேதிகளில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாய்; ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
w‌w‌w.b-​‌u.ac.‌i‌n

w‌w‌w.b-​‌u.ac.‌i‌n

TN HSC Plus One Result 2018: பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று ( ஆக.13) வெளியிடப்பட்டுள்ளது.  மாணவ, மாணவிகள் www.dge.tn.nic.in எனும் தளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  விடைத்தாள் நகலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பிளஸ் 1 வகுப்புக்கு, கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், இன்று (ஆக.13) வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, 16 மற்றும் 17ம் தேதிகளில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாய்; ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

How to check TN HSC Plus One Result 2018 at www.dge.tn.nic.in: எப்படி மதிப்பெண்கள் பார்ப்பது?

Step 1: மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை க்ளிக் செய்யவும்.

Step 2: உங்கள் roll number/registration number மற்றும் இதர தகவல்களை நிரப்பவும்

Step 3: submit பட்டனை க்ளிக் செய்யவும்.

Step 4: ரிசல்ட் உங்கள் திரையில் தோன்றும்.

Step 5: எதிர்கால தேவைக்காக ரிசல்ட்டை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment