Advertisment

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றம் தீர்மானம்: அதிமுக - பாஜக வெளிநடப்பு

அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், சிஏஏவிற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க தைரியமில்லாததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தீர்மானத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு தைரியமில்லை என்பதுதான் உண்மை என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Legislative assembly passes resolution against CAA, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம், குடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாடு சட்டபேரவை, திமுக, முதலமைச்சர் முக ஸ்டாலின், பாஜக வெளிநடப்பு, அதிமுக வெளிநடப்பு, TN assembly passes resolution against CAA, CAA, AIADMK BJP MLAs walkout, CM MK Stalin bring resolution against CAA, BJP MLAs, AIADMK MLAs

தமிழ்நாடு சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீரமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

தமிழக சட்டப் பேரவையில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மாணட்தில் “அகதிகளாக வருவோரை மதரீதியாக பிரித்து பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 2019ம் ஆண்டு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கும், மத நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இல்லை.

இந்திய நாட்டின் ஒற்றுமையை போற்றும் வகையில் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டப் பேரவை வலியுறுத்துகிறது” என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால்,

இந்திய குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்ட பேரவையில் தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் சட்டப்பேரவையி இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத நல்லிணக்கத்தை பற்றி பேசுவது வருந்தத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மத்திய அரசு பாடுப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொண்டுகொண்டுவந்துள்ள தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம். அரசியலைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டு வருவதற்கு இடம் இருக்கிறது” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத நல்லிணக்கத்தை பற்றி பேசுவது வருந்தத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மத்திய அரசு பாடுப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கொண்டுகொண்டுவந்துள்ள தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம். அரசியலைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டு வருவதற்கு இடம் இருக்கிறது” என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் கே.பி.முனுசாமி பேச முயற்சித்தார். தொடர்ந்து வலியுறுத்தியும் அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிஏஏ குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், சிஏஏவிற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க தைரியமில்லாததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தீர்மானத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு தைரியமில்லை என்பதுதான் உண்மை என்று கூறினார். அத்துடன் அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறீர்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். வெளிநடப்புக்கு வேறு நல்ல காரணங்கள் சொல்லலாம் போய் வாருங்கள் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Aiadmk Cm Mk Stalin Tamil Nadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment