2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக் கிழமை வெளியானது. http://www.tnusrbonline.org என்ற இணையதளத்திற்கு சென்று முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக் கிழமை வெளியாகின.

2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்வு நடைபெற்று 2 மாதங்களாகியும் அதன் முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இதனால், தேர்வெழுதியவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக் கிழமை வெளியிட்டது. தேர்வெழுதியவர்கள் //www.tnusrbonline.org என்ற இணையதளத்திற்கு சென்று முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 5:1 என்ற விகிதத்தில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

×Close
×Close