Advertisment

பொறியியல் படிப்பிற்கனான ரேண்டம் எண் வெளியீடு!

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
enginering, random number

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. இதனை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக 1.40 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை முடிவு செய்யும் வகையில் இந்த ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும்.

இந்நிலையில், உயர்கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை இன்று வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று ரேண்டம் எண் குறித்து அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment