Advertisment

பிழைகளின் குவியலாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வினாத்தாள் - தேர்வர்களின் நிலை?...

TNPSC Group 4 examination : டிஎன்பிஎஸ்சி தற்போது வரை 25 தேர்வுகளை நடத்தியுள்ளது. இந்த ஒவ்வொரு தேர்வுகளிலும் சுமார் 5 முதல் 15 சதவீதம் வரையிலான பிழைகள் மற்றும் தவறுகள் தவறாது இடம்பிடித்து விடுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

செப்டம்பர் 1ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், எண்ணற்ற பிழைகள் மற்றும் தவறுகள் இருப்பதாக தேர்வு பயிற்சியாளர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்வர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 1ம் தேதி குரூப் 4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சில தவறுகள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

01. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்வு வினாத்தாளில் அது குறித்த கேள்விக்கு அக்டோபர் 12, 20,21 மற்றும் அக்டோபர் 25 என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 12 ல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 4 Answer Key: தாமதம் இல்லை இது... பழைய அனுபவம் தந்த உஷார் நடவடிக்கை

02. 1951ம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்ற கட்சிகள் என்ற கேள்விக்கு 54,64,74 மற்றும் 84 என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், சரியான விடை 53 ஆகும்.

03. ஜீரோ டிகிரி லாங்கிடியுட் மற்றும் ஜீரோ டிகிரி லாட்டியுட் கொண்ட இடம் என்ற கேள்விக்கு தெற்கு அட்லாண்டிக் மற்றும் ஆப்ரிக்காவின் மேற்கு பகுதி விடைகளாக கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், மேற்கு ஆப்ரிக்கா என்பதே சரியான விடை ஆகும்.

04. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு உரிமைகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால், வினாத்தாளில் கடமைகள் என்று குறிக்கப்பட்டிருந்தது.

05. சரியான விடையை பொருத்துக பிரிவில் ஆங்கிலத்தில் முதலாம் லோக்சபா கலைப்பு என்ற இடத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாக குடியரசு தினம் என்று இருந்தது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சியாளர் நட்ராஜ் கூறியதாவது, டிஎன்பிஎஸ்சி இந்தாண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை 25 தேர்வுகளை நடத்தியுள்ளது. இந்த ஒவ்வொரு தேர்வுகளிலும் சுமார் 5 முதல் 15 சதவீதம் வரையிலான பிழைகள் மற்றும் தவறுகள் தவறாது இடம்பிடித்து விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகளில் அண்மைக்காலமாக கேள்விகள் தவறுதலாக கேட்கப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment