Advertisment

TNPSC Notifications 2019: பட்டதாரிகள், பொறியாளர்கள், டிப்ளமோ படித்தவர்கள்... அத்தனை பேருக்கும் தமிழ்நாடு அரசு வேலை

TNPSC Notifications 2019 in tnpsc.gov.in: தமிழ்நாடு அரசுத் துறைகளில் வேலை இருக்கிறது. தாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu government jobs, TNPSC Notifications 2019, தமிழ்நாடு அரசு வேலைகள்

tamil nadu government jobs, TNPSC Notifications 2019, தமிழ்நாடு அரசு வேலைகள்

Tamil nadu government jobs Announced In Group 1, Fisheries, Agriculture Departments in tnpsc.gov.in: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியில் சேர அருமையான வாய்ப்பு இது... உரிய கல்வித் தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

Advertisment

டி.என்.பி.எஸ்.சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்னென்ன பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருக்கிறது? என்பது தொடர்பான தொகுப்பு இது...

TNPSC Group 1 Recruitment 2019: ஜனவரி 31/2019 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கும் மதிப்பு வாய்ந்த பதவிகளுக்கான தேர்வு இது. மொத்தம் 139 காலியிடங்கள் இருக்கின்றன. ஜனவரி 31/2019 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Read More: TNPSC Group 1 Services Exam 2019 : தமிழ்நாடு குரூப்1 தேர்வு அறிவிப்பு, பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்

எந்தப் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ல் காணலாம். தேர்வு தேதி 2019, மார்ச் 3.

TNPSC Recruitment 2019 For 60 Assistant System Engineer & Asst System Analyst Posts

தமிழ்நாடு அரசுத் துறைகளில் அசிஸ்டண்ட் சிஸ்டர் என்ஜினீயர் மற்றும் அசிஸ்டண்ட் அனலிஸ்ட் பதவிகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. மொத்த காலியிடங்கள் 60. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2019, பிப்ரவரி 20.

Read More: TNPSC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை, முழு விவரம் இங்கே...

முழு விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ல் காணலாம்.

TNPSC Recruitment 2019: 06 Sub Inspectors in Fisheries

தமிழ்நாடு மீன்வளத்துறை சார்நிலைப் பணியில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மீன்வள அறிவியலில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2019, பிப்ரவரி பிப்ரவரி 10.

Read More: ரயில்வேயில் வேலை... நீங்கள் தயாரா? 10-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை தகுதி

முழு விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ல் காணலாம்.

TNPSC Recruitment 2019 For 580 Assistant Agricultural Officer Posts

தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த காலியிடங்கள் 580. வேளாண் படிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள், விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். விண்ணபிக்க கடைசி நாள் 2019, ஜனவரி 27.

முழு விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ல் காணலாம்.

Read More: TNPSC Recruitment 2019: வேளாண்துறையில் வேலை வாய்ப்பு... டிப்ளோமா முடித்தவரா நீங்கள்?

பட்டதாரிகள், பொறியாளர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், வேளாண் பட்டதாரிகள், வேளாண் படிப்பில் டிப்ளமோ பெற்றவர்கள் என பலருக்கும் தமிழ்நாடு அரசுத் துறைகளில் வேலை இருக்கிறது. தாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

Tnpsc Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment