Advertisment

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கோவையில் மாபெரும் பேரணி: 500-க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு  

தென்னிந்திய திருச்சபைகளின் சோஷியல் கன்செர்ன் பிரிவு சார்பாக கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நூதன முறையில் அமைதியான ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றன.

author-image
WebDesk
New Update
500-க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

500-க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

தென்னிந்திய திருச்சபைகளின்  சோஷியல் கன்செர்ன் பிரிவு சார்பாக கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  எதிரான வன்முறைகளை கண்டித்து நூதன முறையில் அமைதியான ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றன.

Advertisment

நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள் - பெண்  குழந்தைகளுக்கு எதிராக  நடைபெறும்  பல்வேறு  வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும்  கருப்பு வியாழனாக அனுசரித்து வருகின்றனர்.

publive-image

தென்னிந்திய திருச்சபையின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களது எதிர்ப்புகளை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு  தாலூகா அலுவலகம் முன்பாக, தென்னிந்திய திருச்சபையின் சோசியல் கன்சர்ன் எனும் சமூக செயல்பாட்டு பிரிவு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன ஆர்பாட்டத்தில் 500"க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து பந்தைய சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

publive-image

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடந்த இந்த போராட்டத்தில் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களின் தைரியமே பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்களுக்கு சம உரிமை, பெண்ணுரிமை காப்போம், பெண்களுக்கு  எதிரான அத்துமீறல்களை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி  அணி வகுத்து நின்றனர்.தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காப்போமென உறுதி மொழி எடுத்தனர்.

publive-image

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment