Today news : தமிழகத்தில் சலூன் கடைகள் மற்றும் ஸ்பாக்களில் ஹேர்கட் செய்ய ஆதார் எண் கட்டாயமாகிறது. தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல் படி முடி திருத்தம் செய்ய செல்லும் போது நீங்கள் மறக்காமல் ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
Today news : முடிவெட்ட ஆதார்!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சலூன், பியூட்டி பார்லர், ஸ்பா இயங்க தடை விதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் முடிதிருத்தம் செய்ய முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வரும் தமிழக அரசு , சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா சில நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி அளித்தது.
இதனைத்தொடர்ந்து, தற்போது "சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்கள் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை குறிப்பிடுவதற்கான பதிவேட்டை பராமரிக்க வேண்டும்" என்று வருவாய் நிர்வாக ஆணையர் J.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதையும் நோய்த்தொற்றைக் கண்காணிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொள்கையால் வாழும் கொற்றவர் கலைஞர்: 97வது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் புகழஞ்சலி
1. சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
2. அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
3. ஏர் கண்டிஷனிங் வசதிகளைப் பயன்படுத்தக்கூடாது .
4. வாடிக்கையாளர்களுக்கு பணி, சேவையை துவங்குவதற்கு முன்னர், சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கட்டாயம் கழுவ வேண்டும்.
5. இருமல், காய்ச்சல் உள்ள பணியாளரை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின்
உரிமையாளர்கள் பணியில் அமர்த்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுப்போன்ற சில நிபந்தனைகளுடன் சலூன் கடைகள் இயங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பபட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil