/indian-express-tamil/media/media_files/VO8J1761dNST9k7agtUL.jpg)
Today News In Tamil
பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ. 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் – ரூ. 94.24க்கும் விற்பனை.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1843 மில்லியன் கன அடியாக உள்ளது; 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 126 மில்லியன் கன அடியாக உள்ளது; 20 கன அடி நீர் வெளியேற்றம்.500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 341 மில்லியன் கன அடியாக உள்ளது; 12 கன அடி நீர் வெளியேற்றம்!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து . தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் பயங்கர விபத்து. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு . ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு . சம்பவ இடத்தில் சங்ககிரி போலீசார் விசாரணை.
கிருஷ்ண ஜெயந்தி விழா
தஞ்சை நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப்போடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு.
லைட் மெட்ரோ அமைக்க திட்டம்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க திட்டம். சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தில் ஆய்வு அண்ணா நகர், தி. நகர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு. 2.50 லட்சம் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டம்.
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி - 9ம்தேதி ஆலோசனை
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள், வருகிற 9ம்தேதி ஆலோசனை. சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனை. மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமீபத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை.
ஆந்திராவில் இரு கட்சிகள் இடையே மோதல்
ஆந்திரா, பீமாவரம் நகரில் தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் நடத்திய பேரணியில் மோதல் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்.சி.பி. கட்சியினர் ஒருவரையொருவர் கற்களை வீசு தாக்கி கொண்டதால் பரபரப்பு தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் - போலீசார் விசாரணை.
பல்லடம் கொலை- 2 பேர் சரண்
பல்லடம் படுகொலை சம்பவம் - முக்கிய குற்றவாளிகள் 2 பேர் காவல்நிலையத்தில் சரண். முக்கிய குற்றவாளி வெங்கடேஷ், சோனைமுத்து இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண். கடந்த சனிக்கிழமை பல்லடத்தில் 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இக்கொலை சம்பவத்தில் ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது.
உதயநிதி மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
அமைச்சர் உதயநிதி மீது உ.பி.யில் வழக்குப்பதிவு சனாதனம் பற்றி பேச்சு. உத்தரபிரதேசம் ராம்பூர் காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகியோரின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு. சனாதன தர்மம் குறித்து கருத்து கூறிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு
காவிரி நீர்: செப்டம்பர் 21-ல் விசாரணை
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்து விடக் கூறும் தமிழ்நாடு அரசின் மனு செப்டம்பர் 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - உச்சநீதிமன்றம் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் இன்று முறையிடப்பட்டது.
'பாரதியன்' - டி.பியை மாற்றிய தோனி
பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் தோனியின் இன்ஸ்டாகிராம் dp உள்ளது. தற்போது பாரத் என்பது பேசுபொருளாகியுள்ள நிலையில், பாரதியன் என்ற வாசகத்துடன் உள்ள தோனியின் டிபி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
வருகிற 24-ம்தேதி திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு
சரித்திரத்தையே மாற்றும் செயல்களில் பாஜக ஈடுபடுகிறது: கனிமொழி
பாரத், இந்தியா என இரண்டு பெயர்களையும் மேடையில் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்;
இன்றைக்கு புதுமையாக தேவையில்லாத சர்ச்சையை கிளப்பக்கூடிய வகையில், பாரத குடியரசு தலைவர் என்றும் இந்தியாவின் பெயரை மாற்ற போகிறோம் என்றும் கூறுகிறார்கள்;
இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஆராயக்கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்;
எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி, அவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், சரித்திரத்தையே மாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்- சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேச்சு
காவிரி நீர் விவகாரம்- ஆணையத்திடம் கர்நாடகா கோரிக்கை
காவிரியில் இருந்து திறந்த விடும் நீரின் அளவை 3,000 கனஅடியாக குறைக்க ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது;
வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கணக்கிட வேண்டும். கர்நாடகத்தின் 4 அணைகளில் உள்ள நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிட கூடாது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்
உதயநிதி, இந்து மதத்திற்கு எதிராக போர் தொடுக்க முயற்சி செய்கிறார்: கிருஷ்ணசாமி
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் போர் தொடுக்க முயற்சி செய்கிறார்.
மனித குலத்தை தாண்டி எல்லா உயிரினத்திற்கும் பொதுவானதாக சனாதன தர்மம் உள்ள குழலில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது கண்டிக்கத்தக்கது.
நாம் முன்பே நமது நாட்டை பாரத நாடு என கூறுவது வழக்கம் தான்.
பாரத நாடு என்று இந்திய நாட்டின் பெயர் மாற்றம் ஏற்பட்டால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
பாரத மண்டபத்தில் பிரமாண்டமான நடராஜர் சிலை: மோடி ட்வீட்
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது.
ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்- பிரதமர் மோடி X தளத்தில் பதிவு
சிவகங்கையில் ஹெச்.ராஜா பேட்டி
உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகாரளிக்க உள்ளோம்.
சனாதனம் குறித்த பேச்சிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதனம் குறித்து பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்- சிவகங்கையில் ஹெச்.ராஜா பேட்டி
பிரதமர் மோடி தமிழில் ட்விட்
பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு சான்றாக விளங்கும். பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
இந்தியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
டெல்லியில் 16 பேர் கொண்ட இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செப்.13-ம் தேதி நடைபெறுகிறது. கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
ஜி20 மாநாடு - டெல்லியில் விடுமுறை
டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப். 8 முதல் செப். 10 வரை விடுமுறை அறிவிப்பு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னைக்கு திரும்பிய விமானம்
சென்னையில் இருந்து இன்று காலை 4 மணி நேரம் தாமதமாக 9.40 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அங்கு மோசமான வானிலை நிலவியதால் மீண்டும் சென்னைக்கு வந்து தரையிறங்கியது
சுமார் 151 பயணிகள் அந்தமானுக்கு செல்ல இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து, விமானத்தில் ஏறி அங்கு செல்ல முடியாமல் மீண்டும் சென்னைக்கே வந்துள்ளனர்.
சுஷ்மா யாதவ் நியமனம்
கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு ஒருங்கிணைப்பாளராக யுஜிசி பிரதிநிதியான சுஷ்மா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்கழி திங்கள் படத்தின் டீசர் வெளியீடு
இயக்குநர் சிகரம் பாரதிராஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்' படத்தின் டீசரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
சென்னை வண்டலூர் பூங்காவில் கட்டணம் இரட்டிப்பாக உயர்வு: 9ஆம் தேதி முதல் அமல்
சென்னை வண்டலூர் பூங்கா கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. புதிய கட்டணங்கள் வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.115ல் இருந்து ரூ.200 ஆகவும், பேட்டரி காரில் செல்ல ரூ.100ல் இருந்து ரூ.150 ஆகவும், சிங்கம் உலவும் இடத்தை பார்க்க ரூ.100 ஆகவும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். துணை வேந்தர்களை தேர்வு செய்ய வழக்கமாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் எதிர்பை மீறி யு.ஜி.சி சார்பில் உறுப்பினர்களை நியமித்து 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.
பல்லடம் அருகே 4 பேர் கொலைவழக்கில் குற்றவாளிகளிடம் விசாரணை
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி உள்பட இருவர் சரண் அடைந்தனர். வெங்கடேசன் மற்றும் விஷால் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை விசாரணை நடத்தினர். கொலை செய்ய ஆயுதங்களை கொண்டு வந்ததாக வெங்கடேசனின் தந்தை ஐயப்பனையும் பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
விஸ்வகர்மா யோஜனா குலத்தொழிலை ஊக்குவிக்கும் அனைத்துக் கட்சிகள் கண்டனம்
ஒன்றிய அரசின் திட்டத்தை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கையை அரசியலாக்குகிறார் சோனியா - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி: “நாடாளுமன்ற நடவடிக்கையை அரசியலாக்குகிறார்; விதிகளைப் பின்பற்றியே சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி கூடுகிறது. சோனியா காந்தி கடிதம் மூலம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு ஏற்கெனவே பதிலளித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்த விவாதம் மகிழ்ச்சியை அளிக்கிறது - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “சனாதனம் குறித்த விவாதம் திறந்த வெளியில் நடைபெற்று வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. சனாதனம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து இருப்பவர்கள் சங்பரிவார்கள்; பிறப்பின் அடிப்படையில் அனைவர்ம் சமம் இல்லை எனக் கூறுவதே சனாதன தர்மம்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய லட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
சீமான் மீது புகாரளித்த நடிகை விஜய லட்சுமிக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஷவாயு தாக்கி இரு தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு
சென்னை ஆவடி மத்திய அரசின் ஓ.சி.எப் தொழிற்சாலை குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்
மோசஸ் (45), தேவன் (46) இருவரும் ஓ.சி.எப் தொழிற்சாலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக இருந்தனர்
பேருந்து விபத்து
தேனி ஆண்டிப்பட்டி அருகே 30 பயணிகளுடன் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், வெளியே குதித்த ஓட்டுநர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
பேருந்து சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி சிறிய சேதாரத்துடன் நின்றது; பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதரவு
'மாமன்னன்’ படத்தின் இறுதிக் காட்சியை பகிர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
— Mari Selvaraj (@mari_selvaraj) September 7, 2023
செய்தொழில் வேற்றுமை யான்”
—-
வாழ்த்துக்கள் அதிவீரன் ❤️🔥@Udhaystalin sir ❤️💙🖤 pic.twitter.com/V2XSLj6E6n
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.