Advertisment

Tamil News Today: 4ஜி சேவையை தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Today: 4ஜி சேவையை தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்

லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை காவல் துறையினர் கைது செய்தனர். 12 மணி நேர விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

உலகளவில் கொரோனா பாதிப்பு 23.83 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.83 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

12 கி.மீ நடந்தே சென்று பழங்குடியினருக்கு சாப்பாடு தந்த நிஜ ஹீரோ - வெண்ணிலா; வீடியோ இதோ...

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ101.53க்கும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.97.26க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 21:56 (IST) 10 Oct 2021
    4ஜி சேவையை தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்

    பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 4ஜி சேவையில் பேசியதாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்வீட் செய்துள்ளார்.

  • 19:58 (IST) 10 Oct 2021
    தேமுதிக கூட்டணியில் இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் - விஜய பிரபாகரன்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன்: “தேமுதிக கட்சி யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அடி பணிந்து போகாது; தேமுதிக கூட்டணியில் இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

  • 18:56 (IST) 10 Oct 2021
    தமிழகத்தில் ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று சிகிச்சை பலனின்ரி 15 பேர் உயிரிழப்பு

  • 17:37 (IST) 10 Oct 2021
    தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் மீறப்பட்டுள்ளது - ஜி.கே.வாசன்

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் மீறப்பட்டுள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

  • 16:04 (IST) 10 Oct 2021
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

    தி.நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், வில்லிவாக்கம், கிண்டி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  • 16:03 (IST) 10 Oct 2021
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

    தி.நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், வில்லிவாக்கம், கிண்டி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

  • 15:47 (IST) 10 Oct 2021
    உ.பி அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது; நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை; பிரியங்கா காந்தி

    உத்திர பிரதேச அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது; பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

  • 15:46 (IST) 10 Oct 2021
    உ.பி அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது; நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை; பிரியங்கா காந்தி

    உத்திர பிரதேச அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது; பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

  • 14:54 (IST) 10 Oct 2021
    கையிருப்பில் நிலக்கரி - மின்தட்டுப்பாடு வராது; மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்

    நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின்தட்டுப்பாடு வராது என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

  • 14:53 (IST) 10 Oct 2021
    கையிருப்பில் நிலக்கரி - மின்தட்டுப்பாடு வராது; மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்

    நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின்தட்டுப்பாடு வராது என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

  • 14:20 (IST) 10 Oct 2021
    லக்கிம்பூர் வன்முறையை இந்து - சீக்கியர் கலவரமாக மாற்ற முயற்சி- வருண் காந்தி

    லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவத்தை இந்து - சீக்கியர் கலவரமாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன என பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

  • 14:20 (IST) 10 Oct 2021
    லக்கிம்பூர் வன்முறையை இந்து - சீக்கியர் கலவரமாக மாற்ற முயற்சி- வருண் காந்தி

    லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவத்தை இந்து - சீக்கியர் கலவரமாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன என பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றச்சாட்டு

  • 14:19 (IST) 10 Oct 2021
    லக்கிம்பூர் வன்முறையை இந்து - சீக்கியர் கலவரமாக மாற்ற முயற்சி- வருண் காந்தி

    லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவத்தை இந்து - சீக்கியர் கலவரமாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன என பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

  • 14:09 (IST) 10 Oct 2021
    விவசாயிகள் பேரணியில் உரையாற்ற வாரணாசி வந்தடைந்த பிரியங்கா காந்தி

    விவசாயிகள் பேரணியில் உரையாற்றவதற்காக, பிரியங்கா காந்தி வாரணாசி வந்ததுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் விவசாயிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

  • 13:44 (IST) 10 Oct 2021
    திமுக- தேமுதிக கூட்டணி; காலம்தான் பதில் சொல்லும்- விஜய பிரபாகரன்

    திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என்றும் திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

  • 13:42 (IST) 10 Oct 2021
    திமுக- தேமுதிக கூட்டணி; காலம்தான் பதில் சொல்லும்- விஜய பிரபாகரன்

    திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்

  • 13:40 (IST) 10 Oct 2021
    திமுக- தேமுதிக கூட்டணி; காலம்தான் பதில் சொல்லும்- விஜய பிரபாகரன்

    திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என்றும் திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

  • 13:28 (IST) 10 Oct 2021
    பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பாரிவேந்தர்

    பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார்.

  • 13:28 (IST) 10 Oct 2021
    பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பாரிவேந்தர்

    பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார்.

  • 13:02 (IST) 10 Oct 2021
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • 13:01 (IST) 10 Oct 2021
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 13:00 (IST) 10 Oct 2021
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • 12:27 (IST) 10 Oct 2021
    ரூ.250 கோடி வருமானத்தை மறைத்த 2 நிறுவனங்கள்

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டுச் சேலை நிறுவனம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனம் ஒன்று ரூ.150 கோடியும் வருமானத்தை மறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 12:25 (IST) 10 Oct 2021
    ரூ.250 கோடி வருமானத்தை மறைத்த 2 நிறுவனங்கள்

    2 நிறுவனங்கள் ரூ.250கோடி வருமானத்தை மறைத்தது

  • 12:25 (IST) 10 Oct 2021
    ரூ.250 கோடி வருமானத்தை மறைத்த 2 நிறுவனங்கள்

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டுச் சேலை நிறுவனம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனம் ஒன்று ரூ.150 கோடியும் வருமானத்தை மறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 12:22 (IST) 10 Oct 2021
    அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம் - முதலமைச்சர்

    ஆங்கில நாளேடு ஒன்றின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். அப்போது பேசிய முதலமைச்சர், அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

  • 12:21 (IST) 10 Oct 2021

  • 11:45 (IST) 10 Oct 2021
    மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் பிரதியை வெளியிட்ட முதல்வர்

    சென்னையில் ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் வணிக பிரதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சராக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதை விட ஒரு பத்திரிகையாளராக வந்துள்ளேன் என பெருமைப்படுகிறேன்" என்றார்.

  • 11:35 (IST) 10 Oct 2021
    பூண்டி ஏரியில் மதியம் 2 மணிக்கு நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

    பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு நீர் திறக்கப்படவுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தால், கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

  • 11:23 (IST) 10 Oct 2021

  • 10:40 (IST) 10 Oct 2021
    'மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம்' - கமல்ஹாசன்

    தமிழ்நாட்டிற்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து அனல் மின் நிலையங்களுக்கு தங்கு தடையின்றி நிலக்கரி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • 10:05 (IST) 10 Oct 2021
    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஐ.டி ஊழியர் தற்கொலை

    ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாயை இழந்த ஐ.டி ஊழியர் ஆனந்தன் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  • 09:52 (IST) 10 Oct 2021
    94.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

    நாடு முழுவதும் இதுவரை 94.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 66.85 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • 09:25 (IST) 10 Oct 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 23, 624 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

  • 08:04 (IST) 10 Oct 2021
    ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை இன்று ஆய்வு

    ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆம் கட்ட அகழாய்வு பணி இன்று தொடங்கியது. கனமொழி எம்பி, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

  • 07:54 (IST) 10 Oct 2021
    இன்று 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

    தமிழ்நாடு முழுவதும் இன்று 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.சென்னையில் 1600 முகாம்கள் மூலம் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment