Advertisment

ஜுன் 9-ம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

Tamil news live : காஞ்சிபுரம், சேலம், தரும்பரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news live updates

Tamil Nadu news live updates

tamilnadu news live : எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

NGK Movie Review படிக்க வேண்டுமா?

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக அரசின் இந்த நடவடிக்கை மக்களை கவலையடைச் செய்துள்ளது. எனினும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு வரும் ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Live Blog

news in tamil live updates : சேலம் எட்டு வழிசாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



























Highlights

    19:36 (IST)31 May 2019

    இலங்கை செல்லும் மோடி!

    பிரதமர் நரேந்திர மோடி ஜுன் 9-ம் தேதி இலங்கை வருவதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாலத்தீவு பயணத்தை ஜுன் 8-ம் தேதி முடித்து விட்டு திரும்பும் வழியில் மோடி இலங்கை செல்கிறார்.

    19:10 (IST)31 May 2019

    ஆவின் பொருட்களுக்கு 5% தள்ளுபடி!

    நாளை  உலக பால் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆவின் பொருட்களுக்கும் அரசு 5% தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

    18:21 (IST)31 May 2019

    news in tamil : ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

    தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

    17:21 (IST)31 May 2019

    Today tamil nadu news : அன்புமணி பேட்டி!

    சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும்  என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் . மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பாமக போராடும் - எனவும் அன்புமணி கருத்து. 

    16:45 (IST)31 May 2019

    Today news in tamil : அமைச்சர் வேலுமணி பேட்டி!

    தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தற்போதைய நிலையில் 560 கனஅடி நீர், ஜூன் 15-ம் தேதி வரை வினியோகம் செய்ய முடியும் எடுத்திருப்பதாக  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

    15:59 (IST)31 May 2019

    tamil nadu news Today : ஸ்டாலின் கண்டனம்!

    சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம். தமிழக அரசு உடனடியாக மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    14:46 (IST)31 May 2019

    Today tamil nadu news : மழைக்கு வாய்ப்பு!

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    14:19 (IST)31 May 2019

    Today tamilnadu news : முதல்வர் ஆலோசனை!

    மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளனர், நல்ல முடிவு விரைவில் வரும் - என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

    14:17 (IST)31 May 2019

    Today news in tamil ; மீண்டும் 2ஜி !

    2ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. 

    14:17 (IST)31 May 2019

    Tamilnadu news in tamil : நாங்குநேரி தொகுதிக்கு தேர்தல்!

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது -என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

    14:04 (IST)31 May 2019

    news in tamil : பள்ளிகள் திறக்கப்படும் தேதி!

    புதுச்சேரியில் ஜூன் 3ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்

    12:52 (IST)31 May 2019

    Tamil nadu news in tamil :நீட் தேர்வு!

    சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:50 (IST)31 May 2019

    Tamilnadu news in tamil : திமுக கூட்டம்!

    திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 3ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் - என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 

    tamil news live : சேலத்தில் இருந்து சென்னைக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. இதற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மொத்தமாக 277 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலை கட்டமைப்புக்கு வேண்டி காஞ்சிபுரம், சேலம், தரும்பரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், விவசாய நிலங்களை கையகப்படுத்தவதற்உ எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் எட்டு வழிசாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பாஜக அணியில் அதிமுக இல்லையா? அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட முழுப் பின்னணி

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    Tamilnadu Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment