Today’s Tamil Nadu Weather  Forecast Updates : தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்

மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும்.

By: Updated: July 10, 2019, 08:54:08 AM

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று ( ஜூலை 9ம் தேதி ) இரவு 9 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தமிழகத்தில், அடுத்த 4 நாட்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு :

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பலபகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநல்வேலி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை , திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பநிலை எச்சரிக்கை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மதுரை, கரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Todays tamil nadu weather forecast updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X