தினமும் ரயிலில் செல்பவர்களா நீங்கள்? நாளை கடற்கரை - தாம்பரம் ரயில் இயங்காது!

9 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று இரவு முதல் கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளாத அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடற்கரை – தாம்பரம் :

தினனும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அதிகமாக போக்குவரத்திற்கு பயன்படுத்துவது புறநகர் ரயில்களை தான். அதிலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கும் பணி நடப்பதால், இன்று இரவு கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – கடற்கரை ரயில் சேவையில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இரவு நேரங்களிலும் இந்த ரயில்சேவை அளவுக்குஅதிகமான கூட்டத்துடன் செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வந்துசெல்லும் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடையில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கப்பட்டுவருகிறது.

இதற்காக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாளை( 8-ம்தேதி) இரவு 11.30 முதல் மறுநாள் (9-ம்தேதி) காலை 5.30 வரை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close