Advertisment

மயிலாப்பூரில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்: எந்தெந்த சாலைகளில் அனுமதி?

டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
மயிலாப்பூரில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்: எந்தெந்த சாலைகளில் அனுமதி?

சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் மெட்ரோ ரயில்சேவைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணத்தால், சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டது.

Advertisment

டிசம்பர் 10ஆம் தேதி இந்த மாற்றத்திற்கான சோதனையோட்டம் நடத்தப்பட்டது. அந்த சோதனை வெற்றிகரமாக செயல்பட்டதால் இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் கொண்டுவருவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

publive-image

சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.

முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் பயணிப்பதில் இருந்து, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடுத்து, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்வதில் இருந்து, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்வது தடுக்கப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்வது தடுக்கப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Traffic Diversion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment