Advertisment

டிராஃபிக் ராமசாமிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
டிராஃபிக் ராமசாமிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர் சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் இறங்கி போக்குவரத்தை சரிபடுத்துவார். அதனாலேயே இவருக்கு டிராஃபிக் ராமசாமி என்று பெயர் வந்தது. சென்னையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக ஓடிக்கொண்டிருந்த மீன்பாடி வண்டிகளை வழக்கு தொடர்ந்து ஒழித்தார். அரசியல் கட்சியினர் சாலைகளில் அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார். அது மட்டுமில்லாமல், இவர் தொடர்ந்த பல பொது நல வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் பல திருப்புமுனை தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் எடுக்கப்படுகிறது.

தற்போது 86 வயதாகும் டிராஃபிக் ராமசாமி தேர்த பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஏப்ரல் 4ம் தேதி உடல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிசைப் பிரவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Traffic Ramasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment