Advertisment

Railway Time Table: தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை பார்ப்பது எப்படி?

Railway time table 2019 : ரயில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் புதிய கால அட்டவணைப்படி தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai delhi special train, special train ticket price

chennai delhi special train, special train ticket price

Southern railway time table for all trains- How to check? : தெற்கு ரயில்வே, ஜூலை 1ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து புறப்படும் 20க்கும் மேற்பட்ட ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றங்கள் செய்து புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்திய ரயில்வே, 2019-20ம் நிதியாண்டில், பல்வேறு ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றங்கள் செய்து புதிய கால அட்டவணையை வெளியிட்டு வருகின்றது. அதன்படி, தெற்கு ரயில்வேயில், 20க்கும் மேற்பட்ட ரயில்களின் நேரங்களில் மாற்றங்கள் செய்து புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு, தான்பாத், லோக்மான்யதிலக் டெர்மினஸ், திருவனந்தபுரம், ஆமதாபாத் புறப்படும் ரயில்களின் நேரங்கள் மாற்றியைமக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேட்டுப்பாளையம், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை சென்ட்ரல வந்து சேரும் ரயில்களின் நேரங்களும் மாற்றியைமக்கப்பட்டு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 27 ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்வே கால அட்டவணை, ஜூலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

tamil Nadu Train Timings- தமிழ்நாடு ரயில்கள் கால அட்டவணை

அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் காக்கிநாடா - செங்கல்பட்டு, கச்சுகுடா - செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் - குருவாயூர், புதுச்சேரி - புதுடில்லி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை எழும்பூர் - கொல்லம் உள்ளிட்ட ரயில்களின் நேரங்கள் மாற்றியைமக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் சேலம் - சென்னை எழும்பூர், கொல்லம்- சென்னை எழும்பூர், நிஜாமுதீன் - கன்னியாகுமரி, புதுடில்லி - புதுச்சேரி உள்ளிட்ட ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

புதிய ரயில்வே கால அட்டவணை குறித்த விபரங்களை கீழ்கண்ட இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்

தெற்கு ரயில்வே - புதிய ரயில்வே கால அட்டவணை

புதிய ரயில்வே கால அட்டவணை

ரயில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் புதிய கால அட்டவணைப்படி தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment