சென்னையில் திடீரென்று போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்!

போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுப்பட்ட இருவரும் வழங்கறிஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் நேற்று(28.3.18) நள்ளிரவு 70க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றிரவு  பிராட்வேயிலிருந்து தாம்பரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த  21G பேருந்தில்  குடித்து விட்டு இரண்டு இளைஞர்கள் ஏறியுள்ளனர்.  பின்னர். அவர்களை டிக்கெட் எடுக்கும்படி நடத்துனர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் டிக்கெட் எடுக்க முடியாது என்று வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்பு,  மதுபோதையில் ஒட்டுநர் மற்றும் நடத்துனரை தாகாத வார்த்தையில் பேசி அதை கேட்க வந்த ஓட்டுநனரை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த ஓட்டுநர் ஜாகீர் உசேன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதை கேள்விப்பட்ட 70 க்கும் மேற்பட்ட  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  தாக்குதலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்யும் படி திடீரென்று பணிமனையில் போராட்டத்தில் குதித்தனர்.

பின்னர், அவர்களின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினர், போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர் . அதன் பின்பு, போராட்டம் கைவிடப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுப்பட்ட இருவரும் வழங்கறிஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

தீடீரென்று போக்குவரத்தி ஊழியர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் குதித்தது சென்னையில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

×Close
×Close