Advertisment

பொன்மலை: 1050 மூங்கில் கன்று நட்டு தொழிலாளர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பொன்மலை பணிமனையில் தொழிலாளர்களுக்கு நற்சான்றிதழ், 1050 பீமா வகை மூங்கில் நட்டு குடியரசுதின விழா கொண்டாட்டம் உற்சாகம்.

author-image
WebDesk
New Update
Trichy News in tamil: ponmalai railway workshop republic day celebration

ponmalai (Goldenrock) Workshop republic day celebration, Trichy

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி தென்னக ரயில்வே பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக நாட்டின் 74-வது குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார்ராம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்கள், செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர், பாரத சாரண-சாரணியர் மற்றும் பணிமனைப் பயிற்சி மையத்தினுடைய பயிற்சியாளர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார்ராம் பணிமனை அலுவலர்கள் மற்றும் பணிமனைப் சூப்பர்வைசர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் பேசும்போது தெரிவித்ததாவது; பொன்மலை பணிமனையின் நடப்பு நிதியாண்டு 2022-23-ல் 31.12.2022 வரையில் பல்வேறு துறைகளில் நடந்து முடிந்த சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும் நடப்பாண்டில் மண்டல அளவில் அதிகமான கேடயங்களைப் பெறுவதற்கு அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்த குழுவின் இடைவிடாத முயற்சியினை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

இந்தப் பணிமனையின் உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலன் முதலானவற்றில் தொழிலாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆற்றிய சிறப்பான முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிய தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார்ராம் 41 தொழிலாளர்களுக்கு சிறப்பு விருதுகளையும், 35 கண்காணிப்பாளர்கள், மேலும் 4 அலுவலர்களுக்கு தலைமைத்துவ விருதுகளையும் மற்றும் 20 தொழிலாளர்கள் அடங்கிய 4 குழுக்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

முதன்முறையாக, சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் 2022-ல் பொன்மலையில் உள்ள இரயில்வே உயர்நிலைப்பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். குடியரசு தின கொண்டாடடங்களின் ஒரு பகுதியாக விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் விருது பெற்றவர்கள், தலைமைப் பணிமனை மேலாளர் முன்னிலையில், 1050 பீமா வகை மூங்கில் (முள்ளில்லா) மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுவரை, பொன்மலை பணிமனை சுற்றியுள்ள பகுதிகளில் 12,250 வகை மூங்கில் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காடு வளர்ப்பு மற்றும் அறிவியல் கழிவு மேலாண்மை முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு 4,000 மெட்ரிக் டன் பசுமை இல்லா வாயு வெளியேற்றத்தை பொன்மலை பணிமனை தடுத்துள்ளது. மேலும் காடு வளர்ப்பு ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் வகையில் சுமாராக 7,600 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் பொன்மலை இரயில்வே உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள் மற்றும் பணிமனைப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள், பாரத சாரண-சாரணியர்களின் தேசபக்தி சார்ந்த ஆக்கப்பூர்வமான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Trichy Republic Day 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment