Advertisment

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை சூழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.. இன்று ஒருநாள் மட்டுமே அனுமதி!

மாணவ-மாணவியரில் சிலர் பணிமனையில் ரயில் என்ஜின் மற்றும் கேரஜ் பராமரிப்பு, புதுப்பிப்பு குறித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy Railway Workshop opens for public viewing

இந்தப் பணிமனையில் 750 பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் மகளிர் தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு அனைத்து மகளிர்க்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும்.

இந்த நிலையில் இன்று (அக்.3) பொன்மலை ரயில்வே பணிமனையினை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர் திரளாக வந்து பார்வையிட்டு சென்றனர்.

Advertisment

மாணவ-மாணவியரில் சிலர் பணிமனையில் ரயில் என்ஜின் மற்றும் கேரஜ் பராமரிப்பு, புதுப்பிப்பு குறித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டனர்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தென்மண்டலத்தில் அமைந்துள்ள மூன்று ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும்.

இப்பணிமனையானது 1926இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928இல் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை 96 வருடங்கள் ஆகிறது.

மொத்தமாக 200 ஏக்கர் பரப்பளவில் இப்பணிமனையானது அமைந்துள்ளது.

இந்தக் கட்டிடக்கலையானது முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும், பிரிட்டிஸ் கட்டிடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது.

இப்பணிமனையானது இரண்டாவது உலகப் போரின்போது ராயல் ஏர்போர்ட்ஸ் என்னும் பிரிட்டன் நாட்டின் விமானப்படை விமானங்கள் பழுது பார்த்து வந்தது. இப்பணிமனையை சுற்றிலும் அமைந்துள்ள 2500 சதுர ஏக்கர் நிலப்பரப்பில் பணிமனை ஊழியர்கள், குடும்பங்கள் தங்குவதற்கான குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

இப்பணிமனையானது ஆரம்ப காலத்தில் தங்களுக்கு தேவையான மின்சாரம் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் பெற்றிருந்தது.

இங்கே நீலகிரி மலை ரயில், அகலப்பாதை பெட்டிகள் அனைத்தும் பராமரிப்பு செய்யப்படுகிறது. மேலும் இப்பணிமனையில் அகலப்பாதை, மீட்டர் கேஜ் மற்றும் நேரோ கேஜ் பெட்டிகள் தான்சானியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிமனை துவங்கிய ஆரம்ப கால கட்டங்களில் ரயில்வே நிர்வாகத்தின் மூலம் டீசல் இன்ஜின்கள் ஜப்பான், டோக்கியோ மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் இருக்கும் ரயில்வே மண்டலங்களுக்கு மறு சீரமைப்பு செய்து அனுப்பப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட சரக்கு பெட்டிகளான பாம் வேகன், கோல் வேகன், ஆயில் டேங்கர் வேகன் இவை அனைத்தையும் இப்பணிமனையில் தயாரித்து அனுப்பப்படுகிறது.

இப்பணிமனையின் நோக்கமே நீராவி இன்ஜின்களை உற்பத்தி செய்வதும், டீசல் மற்றும் ரயில் பெட்டிகளை பழுது பார்ப்பதும் ஆகும்.

இப்பணிமனையாவது 2 மாதத்திற்கு ஒருமுறை ஒரு இன்ஜினை பராமரிக்கும் நிலை மாறி 1990-க்கு பின்பு தற்போது வருடத்திற்கு 10 இன்ஜின்களை மறுசீரமைப்பு செய்யும் திறன் வாய்ந்ததாக வெற்றிகரமாக செயல்படுகிறது.

1990 காலக்கட்டத்தில் 5 மண்டலங்களுக்கு தேவைப்படும் லோக்கோ இன்ஜின்களை அனுப்பியுள்ளது. கான்கார் நிறுவனத்திற்கு வேகன்களை செய்து அனுப்பிய திறன் இப்பணிமனையைச் சாரும்.

இப்பணிமனையில் கடந்த காலங்களில் 12 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் இணைந்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர்.

இதுவே இப்பணிமனையின் மிகப்பெரிய சிறப்பாகும்.

மே 1 தொழிளார் தினத்தன்று இப்பணிமனையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் தொழிலாளர்கள் தன் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்லும் வகையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் இப்பணிமனையில் 750 பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் மகளிர் தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு அனைத்து மகளிர்க்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணிமனைக்கு என்று 150 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் முன்னாள் இந்நாள் தொழிலாளர்களின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் 100 சதுர மீட்டர் பரப்பளவில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் சந்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட்டு வருகிறது.

இதனால் பென்மலை பகுதி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் குடியிருக்கும் பொதுமக்கள், சிறு. குறு வியாபாரிகள் பண்ணையாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் பயனடைந்து வருகிறார்கள்.

இப்பணிமனையைச் சுற்றிலும் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு கருங்கற்களான மதில் சுவர் எழுப்பப்படுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சுமார் 200 பேர் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பணி செய்து வருகின்றனர். இப்பணிமனையை சுற்றி நான்குபுறமும் தொழிலாளர்கள் எளிதில் வந்து செல்ல நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் முக்கிய நுழைவு வாயிலாக ஆர்மரிகேட் அமைந்துள்ளது.

வருடத்திற்கு ஒருமுறை ஆயுதபூஜை அன்று பொதுமக்களின் பார்வைக்காக இப்பணிமனையானது திறந்து விடப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களது கையால் நல்ல உற்பத்தி திறன் கொண்ட சிறந்த பணிமனைக்கான தேசிய விருதை பெற்றது.

2020, 2021, 2022 ஆண்டுகளுக்கான தேசிய அளவிலான சிறந்த உற்பத்தி திறன் கொண்ட பணிமனை என்கிற பரிசையும் இந்த ஆண்டு 2022 தேசிய திறன் பெற்ற தலைமை பணிமனை என்கிற வெகுமதியையும் டென்மார்க்-கான இந்திய தூதர் ஸ்ரீராய் அவர்களது கையால் இம்மாதத்தில் பெற்றோம் என்பது மிகுந்த பெருமைக்குறியது.

இன்று 03.10.22 பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில்வே தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தொழிலாளர்கள் வேலை செய்யும் பொருள்கள், ஆயுதங்களை வைத்து, பொரி, பொட்டு கடலை, சுண்டல், இனிப்புகளை வைத்து சாமி கும்பிட்டு கொண்டாட்டப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பணிமனையின் அனைத்துப்பகுதிகளிலும், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர் திரளாக வந்து பார்வையிட்டு சென்றனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment