/tamil-ie/media/media_files/uploads/2023/03/Trichy.jpg)
Trichy
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் முழக்க போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், மாவட்டத் தலைவர் பால்பாண்டி மாநில செயலாளர் கோதண்ட பாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் இளங்கோவன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கருப்பையா ஆகியோர் விளக்க உரையாற்றினார் இந்த தொடர் பழக்க போராட்டத்தில் மாநில செயலாளர் பழனிச்சாமி துவக்க உரையாற்றினார்.
அப்போது 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்; சாலை பணியாளர்கள் தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியருக்கான ஊதிய மாற்றம் ரூபாய் 5,200, ரூ. 2,020 தர ஊதியம் ரூபாய் 1,900 வழங்க வேண்டும்; சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணி காலத்தில் உயிர் நீந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும்; நெடுஞ்சாலை பராமரிப்பு பிபிஎம்சி ஒப்பந்த நடைமுறை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும், தற்போது நெடுஞ்சாலைகளை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரரை 5 ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்த நடைமுறையும் ரத்து செய்ய வேண்டும்.
மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு பணி வழங்க கோரியும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவை படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக திருச்சி மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us