Advertisment

திருச்சி – திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து

இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

Trichy

பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 7. 20 மணிக்குப் புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (22627) மார்ச் 17 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை திருநெல்வேலி சந்திப்பு - திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, திருவனந்தபுரம் சென்டரலில் இருந்து முற்பகல் 11. 35 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் சென்டரல் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் (22628) மார்ச் 17- ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை திருவனந்தபுரம் சென்டரல் - திருநெல்வேலி சந்திப்பு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment