Advertisment

டிடிவி.தினகரன் பதவியேற்பு : இரட்டை அறிவிப்பால் கவனத்தை திருப்பிய இபிஎஸ்

டிடிவி தினகரன் பதவியேற்பு தருணத்தில் அடுத்தடுத்து பொங்கல் பரிசு, விவசாயிகளுக்கு சலுகை என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

டிடிவி தினகரன் பதவியேற்பு தருணத்தில் அடுத்தடுத்து பொங்கல் பரிசு, விவசாயிகளுக்கு சலுகை என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

டி.டி.வி.தினகரன் இன்று (டிசம்பர் 29) சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் அறையில் இன்று பிற்பகலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

டி.டி.வி.தினகரனின் பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்து இதற்காக ஆயிரணக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ கடற்கரை சாலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் தினகரன். மொத்த மீடியாவின் கவனமும் அந்தப் பக்கம் திரும்பிய நிலையில்தான் இன்று பகல் 12 மணியளவில் முதல் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு அரசின் அத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் அறிவிப்புதான் அது! அதில், ‘பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு கீழ்கண்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு வெளியானதும் மொத்த மீடியாவும் டிடிவி.தினகரனின் ஊர்வல கவரேஜை விட்டுவிட்டு, முதல்வரின் அறிவிப்புக்கு தாவின. இதற்கிடையே எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற டிடிவி தினகரன் தலைமைச் செயலகத்தில் பரபரப்பாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ‘ஆர்.கே.நகர் தோல்விக்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு விலக வேண்டும். அப்போதுதான அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்’ என்றார்.

டிடிவி தினகரன் பேட்டி முடிந்த சிறிது நேரத்தில் விவசாயிகளுக்கு சலுகை வழங்கி மற்றொரு அதிரடி அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது : ‘உழவர் பெருமக்களின் வாழ்வு வளம்பெறும் வகையில், வேளாண் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

எனவே தான் நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட தமிழ்நாடு அரசு அதிக விலையை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் நிர்ணயித்து வழங்கி வருகிறது. நடப்பு கொள்முதல் பருவம் 2017-2018-ல் மத்திய அரசு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1590/-ம், பொது ரகத்திற்கு ரூ.1550/-ம் நிர்ணயம் செய்துள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.70/-ம், பொது ரகத்திற்கு ரூ.50/-ம் கூடுதலாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1660/மற்றும் பொது ரகத்திற்கு ரூ.1600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் காரணமாக, விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்யப்படும் நெல்லை, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விலைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இயலும். எனது இந்த நடவடிக்கை விவசாய பெருங்குடி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.’ என கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த இரட்டை அறிவிப்புகள் டிடிவி தினகரன் பக்கம் இருந்து மீடியாவை ஓரளவு திசை திருப்பியது நிஜம்! திமுக.வை சமாளிப்பதைவிட டிடிவி தினகரனை சமாளிப்பது ஆளும்கட்சிக்கு சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது.

 

Ttv Dhinakaran Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment