'ஆட்சி உங்களுக்கு... கட்சி எங்களுக்கு': முதல்வரை சந்திக்கும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்!

சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் டிடிவி தினகரனை சந்தித்து, இதுவரை 34 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அனைத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கின்றனர். அப்போது, ஆட்சியை முதல்வரும், கட்சியை தினகரனும் வழிநடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சி அலுவலகத்தில் பணி செய்ய தினகரனுக்கு இடையூறு கொடுக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தவும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

×Close
×Close