தொடர்ந்து போராடும் தினகரன்; ஜாமீன் எப்போது? புதிய அறிவிப்பு!

இதனால், தினகரன் தொடர்ந்து திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

இரட்டை இலை சின்னத்தைப் மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகர்கள் நரேஷ், பாபு ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் இல்லாததால் தன்னால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது என்றும், ஆகவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தினகரன் தொடர்ந்து வலியுறுத்தியும், நீதிமன்றம் அவரது ஜாமீன் வழக்கை தள்ளிவைத்தே வந்தது. இந்நிலையில், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவின் ஜாமீன் மனு மீது வரும் 31-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

×Close
×Close